முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வர்த்தக ஒப்பந்தம்: இந்தோனேசியாவுக்கு வரியை 19 சதவீதமாக குறைத்த டிரம்ப்

புதன்கிழமை, 16 ஜூலை 2025      உலகம்
trump 2024-12-30

Source: provided

அமெரிக்கா : இந்தோனேசியாவுக்கு விதிக்கப்பட்ட வரியை 19 சதவீதமாக  அமெரிக்க அதிபர் குறைத்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த வரி விதிப்பை தடுக்க பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் சில நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது. வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது டிரம்ப் சமீபத்தில் வரி விதிப்பை அறிவித்து வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்கா - இந்தோனேசியா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது:-

நாங்கள் இந்தோனேசியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம். இது குறித்து அந்த நாட்டின் அதிபருடன் நான் பேசினேன். இதற்கு முன்பு இந்தோனேசியா சந்தையை நம்மால் அணுக முடியாத சூழல் இருந்தது. பல கட்டுப்பாடுகள் இருந்தன. இப்போது அது நீக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த ஒப்பந்தத்தில் மிகவும் முக்கியமானது. அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு இந்தோனேசியா எந்த வரியும் விதிக்காது. அதேவேளையில் இந்தோனேசிய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 19 சதவீத வரி விதிக்கும். இந்தோனேசியாவுக்கு விதிக்கப்பட்ட வரி 19 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்க - இந்தோனேசிய வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா ஆசிய நாட்டின் சந்தைகளுக்கு முழு அணுகலைப் பெறும்.

இதே வழியில் இந்தியாவுடனான ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. நாங்கள் இந்தியாவை அணுகப் போகிறோம். இந்த நாடுகளில் எதற்கும் எங்களுக்கு அணுகல் இல்லை. எங்கள் மக்களால் உள்ளே சென்று வர்த்தகம் செய்ய முடியவில்லை. தற்போது நாங்கள் வரிகளுடன் என்ன செய்கிறோம் என்பதன் காரணமாக அங்கு அணுகலைப் பெற உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து