முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் அதிகாரி கைது: அமெரிக்க தூதரை அழைத்து கண்டனம்

சனிக்கிழமை, 14 டிசம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. 15 - அமெரிக்காவில் பெண் அதிகாரி கைது செய்யப்பட்டது தொடர்பாக தூதரை நேரில் அழைத்து இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஆனால் இந்தப் பிரச்சினையால் இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்காது என அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றும் தேவயானி கோப்ரகடோ (வயது 59) மீது விசா மோசடி வழக்கு , அரசுக்கு தவறான தகவல்களை அளித்தது உள்ளிட்ட குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்த புகாரின் பேரில் நேற்று முன் தினம் தனது குழந்தையை பள்ளிக்கு விட்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்த தேவயானியை பொது இடத்தில் கை விலங்கிட்டு கைது செய்தனர் நியூயார்க் நகர் போலீசார்.  

பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட தேவயானி ரூ.15 லட்சம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. 

தேவயானியின் பணிப் பெண் சங்கீதாவுக்கு விசா அளிக்கும் விவகாரத்தில் தான் இந்த கைது சம்பவம் நடந்தது. 

இந்நிலையில் விசா மோசடி, பணியாளர் களுக்கு ஊதியம் குறைவாக கொடுப்பது தொடர்பான விதிமுறைகளை மீறினால் அமெரிக்க சட்டப்படி குற்றமாகும் என அமெரிக்க போலீசார் தெரிவித்திருந்தனர். 

இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அமெரிக்க தூதர் நான்சி பாவெல்லுக்கு இந்திய வெளியுறவு செயலர் சுஜாதா சிங் சம்மன் அனுப்பினார். அவரை நேரில் அழைத்து இந்திய அரசு சார்பில் கண்டனத்தை தெரிவித்தார். 

இது குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த விவகாரத்தை அமெரிக்க சட்ட விதிகளின் படி தான் கையாள்கிறோம். நீண்ட காலமாகவே இந்தியா அமெரிக்காவோடு நட்பாக உள்ளது. 

இந்த விவகாரத்தால் இரு நாடுகளின் உறவும் பாதிக்காது. அது நீண்ட காலத்திற்கு தொடரும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago