எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நகரி, அக்.7 - தெலுங்கானாவில் மீண்டும் 9ம் தேதி முதல் 11 ம் தேதி வரை 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது.
தனித்தெலுங்கானா கோரி ஆந்திராவில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. தொடர்ந்த நடந்து வரும் இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள், பஸ் ஊழியர்கள், வக்கீல்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் சேர்ந்து வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர். பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் தெலுங்கானாவில் உள்ள 10 மாவட்டங்களில் நேற்று 18 வது நாளாக போக்கவரத்து ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில் விஜய தசமிக்கு பிறகு போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து வருகிற 9,10,11 ஆகிய 3தேதிகளில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என போராட்டக்குழு தலைவர் கோதண்டராம் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ரயில்களை இயக்க ஆந்திர அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. ரயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு வழங்க திட்டமிட்டுள்ளது. போதிய பாதுகாப்பு அளித்தால் ரயில்களை இயக்குவோம் என தென் மத்திய ரயில்வேயும் தெரிவித்துள்ளது. ரயில்களை இயக்கினால் அதனால் ஏற்படும் விளைவுகளை அரசே ஏற்க வேண்டும் என போராட்டக்குழு தலைவர் கோதண்டராம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தெலுங்கானா கோரிக்கைக்காக மதுபான உற்பத்தி தொழிலாளர்களும், கலால் பிரிவு போலீசாரும் பொது வேலை நிறுத்தத்தில் குதித்தனர். இங்கு மதுபான உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025