Idhayam Matrimony

அன்னா ஹசாரேவுக்கு பதிலடி கொடுப்போம்-சோனியா

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டிச. - 25 - ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் மூலமாக அன்னா ஹசாரேவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கட்சியினரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.  பாராளுமன்றத்தில் புதிய லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீது விவாதமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த மசோதாவும் வலுவானதாக இல்லை என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறி வருகிறார். மேலும் உ.பி. உட்பட 5 மாநிலங்களில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்யப் போவதாகவும் அன்னா ஹசாரே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நேற்று உ.பி. உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி உ.பியில் பிப்ரவரி மாதத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மற்ற மாநில தேர்தல் தேதிகளையும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமது கட்சியினர் மத்தியில் டெல்லியில் உரையாற்றினார். அப்போது வரவிருக்கும் 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அதன் மூலம் அன்னா ஹசாரேவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும். அதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதே போல் சென்னையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி பேட்டியளித்தார். அப்போது அவரும் அன்னா ஹசாரேவை தாக்கிப் பேசினார். மசோதாவை நிறைவேற்ற வேண்டியது பாராளுமன்றமே தவிர, அன்னா ஹசாரே அல்ல. அவரது போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு மத்திய அரசு ஒடுக்கும் என்று ஆவேசமாக கூறினார் நாராயணசாமி. ஒட்டுமொத்தமாக சொன்னால் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் அன்னா ஹசாரேவை தாக்கிப் பேச தொடங்கி விட்டார்கள்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago