முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா பல்கலை. மாணவர்கள் வீடுவீடாகச் சென்று மக்களுக்கு விளக்கம்: குப்பைகளை வகை பிரித்து வழங்க விழிப்புணர்வு

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2018      சென்னை

பெசன்ட்நகர் பகுதியில் வீடுகளில் குப்பைகளை வகைப் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து சென்னை மாநகராட்சியுடன் இணைந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் வீடு வீடாகச் சென்று நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சென்னை மாநகராட்சி சார்பில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு பெசன்ட்நகரில் தூய்மை இந்தியா திட்டம் மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

துண்டுப் பிரசுரங்கள்

 இதில் ராம்கி நிறுவன துப்புரவு பணியாளர்கள், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கிரெடாய் நிறுவனத்தினர் பங்கேற்று அப்பகுதியில் தெருக்களில் குப்பைகளை அகற்றினர். அதனைத் தொடர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குப்பை மேலாண்மை திட்டம் மற்றும் குப்பைகளை வகைப் பிரித்து வழங்குவதன் அவசியம், எவ்வாறு வகைப் பிரித்து வழங்குவது என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் வீடு வீடாகச் சென்று விழிப் புணர்வு ஏற்படுத்தினர். அது தொடர்பான விழிப் புணர்வு துண்டுப் பிரசுரங்களை யும் விநியோகித்தனர். மேலும் தொற்றுநோய்கள் வராமல் தடுக் கும் வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கினர்.

பின்னர் எலியட்ஸ் கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக், காகிதக் குப்பைகளை அகற்றினர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலர் டி.ஜி. சீனிவாசன், கிரெடாய் அமைப் பின் நகர மேலாளர் கீர்த்தி, ராம்கி நிறுவன திட்ட மேலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து