முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய ஆப்

இயற்கை சீற்றங்களான நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறிய  ‘மை ஷேக்’ என்ற மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் வருவதை இந்த ஆப் மூலம் எளிதாக முன்கூட்டியே அறியலாம். சீஸ்மோமீட்டர் எனும் கருவியினால் மொபைலில் உள்ள ஜிபிஸ் மூலம் இந்த அதிர்வுகள் உணரப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இது வரை இரண்டு லட்சம் பேர் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

புதிய தீர்வு

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் உள்ள யுனிவர்சிடட் கரோல்ஸ் 3டி மாட்ரிட் என்ற நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் பிரைலி மூலம் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆப் உருவாக்கி அதன் மூலம் பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் டி.வி. நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர். இதன் சோதனை ஓட்டம் மாட்ரிட் நகரில் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்தது.

புற்றுநோய்க்கு தீர்வு

அமெரிக்காவில் உள்ள ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புற்றுநோயை தடுப்பது சம்மந்தமாக தொடர்ந்து ஆய்வு நடத்தியதில், புற்றுநோய் செல்கள் எப்படி பரவுகிறது என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர். உடலில் புற்றுநோய் செல் உருவானதும் அது ஒவ்வொன்றாக பிளவு ஏற்பட்டு உடல் முழுவதும் பரவுகிறது. அவற்றில் பிளவு ஏற்படாமல் தடுத்துவிட்டால் அதன்பிறகு அந்த செல்கள் மற்ற பகுதிக்கு பரவாது. எனவே புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் அந்த நோயாளி மேற்கொண்டு செல் பரவுதல் இல்லாததால் உயிரிழப்பு ஏற்படாது. இப்போது புதிய மருந்துகள் மூலம் இந்த செல் பரவுதலை தடுத்துவிடலாம் என்று இந்த ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் டேனிப்விரிட்ஸ் கூறுகிறார்.

யுரேகா, யுரேகா என சொன்னவர் யார் தெரியுமா?- ஏன் சொன்னார்

ஆர்கிமிடிஸ்    என்பவர்    கிரேக்க நாட்டைச் சேர்ந்த  ஒரு  கணித  மேதை;  இவர் வாழ்ந்த  காலம் கி.பி.287-212  ஆகும்.  ஆர்கிமிடிஸ்  தமது  கோட்பாடுகளை   நிரூபிப்பதற்கு, உரிய   சோதனைகளை நடத்திப்  பார்ப்பதில்  பெரும்  நம்பிக்கை கொண்டிருந்தார்.   அவர் கண்டுபிடித்த  ஆர்கிமிடியன்  திருகாணி தொழில் நுட்பம் நீரேற்றும்   பயன்பாட்டிற்கு  உரியதாக  இன்றும்  வேளாண் பாசனத்  துறையில்  விளங்கி  வருகிறது. நெம்புகோல்கள் மற்றும்  கப்பிகள் (pulleys) பயன்பாட்டிற்கு உரிய விதிகளை,  ஆர்கிமிடிஸ்தான்  அறிவியல்  உலகிற்கு  அளித்தார். ஆர்கிமிடிசின்  வாழ்க்கையில்  நடந்ததாகக்  கூற்ப்படும்  ஒரு  நிகழ்வு   இன்றும் அறிவியல்   உலகில்   நினைவு  கூறப்படுவதாக  விளங்கி  வருகிறது.  குளியலறையில் நிர்வாணமாகக்  குளித்துக்  கொண்டிருந்த நிலையில்,  அவர் ஓர் அறிவியல் உண்மையைக்  கண்டறிந்தார்; உடனே, "கண்டுகொண்டேன், நான் கண்டு கொண்டேன்" என்னும் பொருள்படும் ‘யுரேகா! யுரேகா! (Eureka!)’ எனக் கூறியவாறே தெருவில் இறங்கி நிர்வாணமாக ஓடினார் என்பதே அந்நிகழ்வு. இந்நிகழ்ச்சி நடந்ததோ அல்லது கற்பனையோ, ஆனால் அவர் கண்டுபிடித்த உண்மை இன்றும் போற்றப்பட்டு வருகிறது; அவ்வுண்மை இதுதான்: "ஒரு பொருள் நீரில் மிதந்தால் அல்லது மூழ்கினால், அது தன் எடைக்கு சமமான நீரை வெளியேற்றுகிறது".

அடிக்கடி தக்காளி ...

தக்காளியில் அதிகளவு உள்ள சிட்ரிக் ஆசிட், வயிற்றில் அதிக கேஸ் மற்றும் எரிச்சலை உண்டாக்கி, ஜீரண சக்தியை குறைத்துவிடும். மேலும், சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனையை உருவாக்கும். கிட்னி தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், பொட்டாசியம் நிறைந்த தக்காளியை அதிகம் சாப்பிடக் கூடாது.

விந்தணு குறைவு

1973 - 2011-ம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட 185 ஆய்வுகளின்படி, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் தொடர்ந்து ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை பாதிக்கு பாதி குறைந்துள்ளதாம். இது நீடித்தால் மனித இனத்தின் அடையாளமே அழிந்து போகுமாம். ஆனால், ஆசியா, ஆப்பிரிக்காவில் இந்த அளவு பாதிப்பு இல்லையாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago