முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகின் 'மாதிரி'

சுமார் 49 ஆயிரம் சதுர அடியில் உலகின் மிகப் பெரிய மினியேச்சர் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மினியேச்சரில் ஆசியா உள்ளிட்ட 5 கண்டங்களின் முக்கிய கட்டடங்கள், சுற்றுலாத் தளங்கள் இடம்பெற்றுள்ளன. குலிவேர்ஸ் கேட் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த மினியேச்சரில் லண்டனின் பக்கிங்காம் அரண்மனை, பிரான்சின் ஈஃபில் டவர், இந்தியாவின் தாஜ் மஹால், சிங்கப்பூரின் மெரினா பே உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், சுற்றுலாத் தலங்களின் மாதிரிகள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளன. சுமார் 600 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதை உருவாக்கியுள்ளனர். மினியேச்சரை உருவாக்க சுமார் 260 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வரவுள்ளது.

இதற்குமா ரோபோட்?

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடந்த கண்காட்சியில் பெப்பர் எனும் ரோபோட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த ரோபோட் புத்த மதம் பாரம்பரிய முறைப்படி இறுதிச் சடங்கு பணிகளை செய்து காண்பித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதில் உள்ள மென்பொருள் மூலம் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இவற்றை பயன்படுத்தி இறுதி சடங்கை மேற்கொள்ளலாம்.

5000, 1000 ரூபாய் நோட்டுகள்

பிரதமர் மோடி அறிவித்த 500, 1000 ரூபாய் தாள்கள் முடக்கப்பட்ட அறிவிப்பிற்கு பிறகு இதை அறிந்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். 2,000 ரூபாய்க்கே வியக்கும் நபர்களுக்கு இந்தியா 5,000 , 10,000 தாள்களையும் வெளியிட்டது பற்றி தெரியுமா? 1954 - 1978 ஆண்டுகளுக்கு மத்தியில் இந்திய அரசு 5,000 மற்றும் 10,000 ரூபாய் தாள்களை வெளியிட்டது. பிறகு இது நிறுத்தப்பட்டது.

மகளிர் நினைவாக

உலக மகளிர் தினத்தன்று, அமெரிக்காவில் பல அலுவலகங்களில் பெண்கள் வேலைக்குச் செல்வதில்லை. பெண்களின் துணிச்சலைப் போற்றும் விதமாக, நியூயார்க் நகரில் ஒரு சிறுமியின் சிலை நிறுவப்பட்டுள்ளது. சீறும் காளைச் சிலைக்கு எதிராக, அச்சமின்றி சிறுமி நிற்கும் வகையில் இந்தச் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது

இவரை தெரியுமா?

2015-ம் ஆண்டில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையின் வருட சம்பளம் இந்திய மதிப்பில் ரூ.667 கோடி ஆகும். தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பின்னர் அவரது சம்பளம் மற்றும் இதர சலுகைகள் உயர்த்தப்பட்டது. இனி இவரது சம்பளம் கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக இருக்கும்

தலையாட்டிச் சித்தர்

பிரும்மரிஷி மலை, திருச்சி பெரும் புலியூர் என்ற பெரம்பலூர் அருகில் உள்ள எளம்பலூர் கிராமத்தில் உள்ளது. 210 மகா சித்தர்கள் வாசம் செய்த இங்கு ஜீவ சமாதி அடைந்த தலையாட்டிச் சித்தர் முக்காலமும் அறிந்தவர். மகா ஞானி. இன்றளவும், இங்கு, தம்மை நாடி வருவோருக்கு அருள் செய்து வருகிறாராம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago