முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மேகங்களின் எடை எவ்வளவு - கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்

எப்போதாவது நீங்கள் வானத்தை பார்க்கும் போது "மேகங்களுக்கு எவ்வளவு எடை இருக்கும்?" என்று நினைத்து இருக்கிறீர்களா? பார்க்க பஞ்சு பொதி போல் காணப்பட்டாலும் மேகங்கள் எடை கொண்டவையாகும்.  சராசரியாக ஒரு மேகத்தின் எடை 1.1 மில்லியன் பவுணடுகள் ஆகும். அதாவது ஒரு மேகத்தின் எடை சராசரியாக 100 யானைகளின் எடைக்கு ஈடானதாகும்.

விண்வெளி ஆபத்து

விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் வளர்சிதை மாற்றத்தால், அவர்களின் எலும்புகளின் அடர்த்தி குறையும். மேலும், எலும்புகள் கரைந்து அவர்களின் சிறுநீர் வழியாக வெளியேறும் என்பதால், அதை சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறார். பூமிக்குத் திரும்பியவுடன் அந்த சிறுநீர் பல்வேறு ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும்.

நானோ டிஸ்க்‘ முறை

ஆண்டுக்கு 20 லட்சம் பேர் மரணம் அடையும் உயிர் கொல்லி நோயான காச நோயை கண்டரிய ஒருவாரம் ஆகும் நிலையில்,  தற்போது புதிய முறையில் ரத்த பரிசோதனை மூலம் ஒரு மணி நேரத்தில் கண்டறிய  முடியும் என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு ‘நானோ டிஸ்க்‘ முறை என பெயர்.  இதன் மூலம் நோயாளிக்கு விரைவாக சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியுமாம்.

கால்சியத்தின் பங்கு

வீடு கட்ட பயன்படுத்தும கான்கிரீட் கலவையைவிட 4 மடங்கு வலிமையானது மனித எலும்பு. பிறக்கும் போது ஒரு குழந்தையின் உடலில் சுமார் 350 எலும்புகளும், அதுவே வளர்ந்த ஒருவருக்கு சுமார் 206-ஆக இருக்கும். இந்த எலும்புகளின் உறுதிக்கு கால்சியமே முக்கிய காரணம்.  நம் உடலில் உள்ள மொத்த கால்சியத்தில் 99 சதவீதம் எலும்புகளில் தான் படிந்திருக்கிறது.

உலகை ஆளும் ரோபோ

சீனா, மனிதர்களை போன்ற உருவம் கொண்ட ரோபோவை தயாரித்து அதை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த மனித ரோபோ பெண் வடிவில் உள்ளதால் இதற்கு 'ஜியா ஜியா' என பெயரிடப்பட்டுள்ளது. இது மனிதர்கள் போலவே முகபாவனைகளை மாற்றும் திறன் கொண்டது. இதற்கு செயற்கை அறிவுத்திறன் வழங்கப்பட்டுள்ளது.ஜியா ஜியா- வை சீனாவில் உள்ள ரெஸ்டாரன்ட்டுகள், நர்சிங் ஹோம், மருத்துவமனை வேலைகளுக்கும் வீட்டு வேலைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, கேள்விகளுக்கு, ஏற்ப பதிலளிக்கும். சொன்ன வேலைகளை துரிதமாக செய்யுமாம்.

மின் விசிறி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?

மனிதன் சூரியனின் சுட்டெரிக்கும் வெப்பத்திலிருந்து தன்னைப் பாதுகாக்கப் பல முயற்சிகள் மேற்கொண்டு வந்தான். முன்னாளில் மர இலைகளும், பறவைச் சிறகுகளும் விசிறியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. பனை ஓலைகளை நீரில் நனைத்து விசிறியாகப் பயன்படுத்தினர்.வௌவாலின் சிறகுகளைப் பார்த்து வியந்த ஜப்பானியர்கள் கி.பி.8ஆம் நூற்றாண்டில் அத்தகைய விசிறிகளை உருவாக்கினர்.மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஸ்கைலர் வீலர் (Schuyler Wheeler) என்பவர் 1886ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் மின் விசிறியைக் கண்டுபிடித்தார். இதன் தொழில்நுட்பம் மிக விரைவாகப் பிற நாடுகளுக்கும் பரவி மக்களிடம் பெரும் புகழ் பெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago