முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செலவு குறைவு

தற்போது ஒளி மூலம் பிரிண்ட் எடுக்கும் செலவு குறைவான புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக பயன்படுத்தப்படும் சிறப்பு பேப்பரில் உள்ள பிரஸ்ஷியன் நீலம், டைட்டேனியம் டை ஆக்சைடு என்ற வேதி கலவை மீது எலக்ட்ரான்களை செலுத்தும் போது தாளில் உள்ள எழுத்துக்கள் வெளிவந்து பிரதிபலிக்கிறது. இதன் மூலம் பேப்பரில் உள்ள எழுத்துகள் நீல வடிவில் பிரிண்ட் ஆகிறது.

புதையல் புதிது

சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியானிங் மாகாணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய புராதனப்பொருட்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். கிறிஸ்து பிறப்பதற்கு முன், சீன ஹன் மன்னராட்சியின் வெண்கல காலத்தினை சேர்ந்த பானைகள், பாத்திரங்கள், இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கோகோ கோலா கிடைக்காத நாடு

உலகம் முழுவதும் பயணம் செய்தாலும் அங்குள்ள எந்த பெட்டிக்கடையிலும் குடிநீர் பாட்டில் கிடைக்குமோ கிடைக்காதோ.. ஆனால் நிச்சயம் கோகோ கோலா கிடைக்கும். அந்த அளவுக்கு தனது வணிகத்தை பரந்து கடை விரித்துள்ளது. ஆனால் கோகோ கோலா கிடைக்காத நாடுகளும் உலகில் உள்ளன என்றால் நம்புவீர்களா.. இரும்புத்திரை நாடு என அழைக்கப்படும் வட கொரியா, அமெரிக்க சிங்கத்தை சீண்டி பார்த்த கியூபா ஆகிய 2 நாடுகளில்தான் கோகோ கோலா கிடைக்காது. அந்த கம்பெனி காரர்கள் தலைகீழாக நின்று தண்ணி குடித்து பார்த்தும் கூட இந்த 2 நாடுகளும் தங்களது நாடுகளில் அதை விற்க அனுமதி மறுத்து விட்டன. இருந்த போதிலும் தங்களது பக்கத்து நாடுகளான மெக்சிகோ மற்றும் சீனாவிலிருந்து சில வியாபாரிகள் இறக்குமதி செய்து விற்பதாக யூகங்கள் உள்ளன.

வாடகைக்கு ரோபோ

ஜப்பானில் ஒரிக்ஸ் ரென்டெக் கார்ப்ரேஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ள யுமி எனப்படும் மனித ரோபோவை வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை, வீட்டு வேலை போன்றவற்றிற்கு வாடகைக்கு எடுத்து வருகின்றனர். மனிதர்களுக்கு தரும் சம்பளத்தை விட ரோபோக்களுக்கு தரும் விலை சற்று குறைவு என்பதால் தானாம்.

தக்காளியின் மகிமை

வயிற்று புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி அன்றாட உணவில் பயன்படுத்தும் தக்காளிக்கு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. வயிற்று புற்று நோய் ‘மாலிக்னன்ட் செல்’ எனப்படும் திசுக்களால் ஏற்படுகிறது. இந்த திசுக்களை மேலும் வளரவிடாமலும், அவை பரவாமலும் தடுக்கும் சக்தி தக்காளிக்கு உள்ளதாம்.

ஆப்பிள் தயாரிக்க விரும்பிய முதல் போன் எது தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போனை வைத்திருந்தாலே ஒரு தனி கெத்து என நவீன யுகத்து யூத்கள் கருதி வருகின்றனர். ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க விரும்பிய முதல் போன் எது தெரியுமா... ஐபோனை தயாரிப்பதற்கு முன்பாக மடக்கி விரிக்கும் போனைத்தான் அது தயாரிக்க விரும்பியது. அதை மடக்கி மூடினால் ஆப்பிளை போல காட்சியளிக்கும். அது போன்ற ஒரு வடிவமைப்புக்கே அது பேடன்ட் உரிமையும் வாங்கி வைத்திருந்தது. இவ்வாறே அது ஆப்பிள் போன் என பெயர் பெற்றது. பின்னாளில்தான் அது ஐபோனை தயாரிக்க தொடங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago