முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தவிர்க்க வேண்டியவை

புரோபயாடிக் கலவை கொண்ட சர்க்கரையை ஜூஸில் சேர்த்து குடிப்பதால், இதில் இருக்கும் நல்ல சத்துக்களும் கூட உடலுக்கு கிடைக்காமல் போய்விடும். ஜூஸில் 30 கிராம்க்கு மேல் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்துவிடுங்கள். முடிந்தளவு முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. இல்லை எனில் உடல் எடை கூடும்.

whats app-ஐ திறக்காமலேயே மெசேஜ் அனுப்ப...

whats app செயலியை திறக்காமலேயே நாம் நமது நண்பர்களுக்கு... நண்பிகளுக்கு மெசேஜ் அனுப்ப முடியுமா.. இதென்ன புது கதையா இருக்கு என்பவர்களுக்குத் தான் இந்த தகவல்.. முடியும்.. எப்படி.. அதற்கு முதலில் Google Assistant  செல்லுங்கள்..அதில் send the whatsapp message to XXX அதாவது XXX என்ற இடத்தில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர் பெயரை கூற வேண்டும்.. பின்னர் அவருக்கு அனுப்ப வேண்டிய வாய்ஸ் மெசேஜையும் பதிய வேண்டும்..இப்போது send என்பதை கிளிக் செய்தால் நண்பரின் வாட்ஸ் அப்புக்கு உங்கள் வாய்ஸ் மெசேஜ் அனுப்பப்பட்டிருக்கும்.. இது எப்படி இருக்கு...

தங்க சுரங்கம்

சூரிய மண்டலம் உருவானபோது ஏற்பட்ட மோதலில் பல சிறுகோள்கள் பெரும் கோள்களிலிருந்து பிரிந்து உருவாகின. அப்படி உருவான ஒரு சிறிய கோளை அன்னிபாலே டி காஸ்பரிஸ் எனும் இத்தாலிய வானியலாளர்  மார்ச் 17, 1852இல் கண்டு பிடித்தார். இதன் சிறப்பு என்ன தெரியுமா, இது தங்கம் உள்ளிட்ட அரிய வகை உலோகங்கள், தனிமங்களால் உருவான மிகப் பெரிய கோளாகும். எனவே இதற்கு 'கோல்டுமைன் ஆஸ்டிராய்டு' என நாசா பெயரிட்டது. உண்மையிலேயே விண்வெளியில் மிதக்கும் ஒரு தங்கச் சுரங்கமான இது, நமது சூரிய மண்டல சுற்றுவட்டப் பாதையில் தான் சுற்றி வருகிறது. இந்தச் சிறுகோளில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் 750 கோடிக்கு மேல் என்று நாசா மதிப்பிட்டுள்ளது. பல விலைமதிப்பற்ற உலோகங்கள், தனிமங்கள் நிறைந்திருப்பதால் அதன் ஒரு சிறு துண்டுகூடப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கும் என்று நாசா கூறுகிறது. இந்த விண்வெளி தங்கச் சுரங்கம் பூமியிலிருந்து சுமார் 32 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. தற்போது செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களின் சுற்றுப்பாதைகளுக்கு இடையில் சுழன்றி வருகிறது.

பேஸ்புக் எண்ணிக்கை

உலகின் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவையை மாதந்தோரும் 200 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இது கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் அதிகம் ஆகும். ட்விட்டர் சேவையை ஏப்ரல் மாத வாக்கில் சுமார் 32.8 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் ஸ்நாப்சாட் சேவையை மார்ச் 31-ந்தேதி வரை 16.6 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.

வினோத மக்கள்

இந்தோனேசியாவில் இருக்கும் ஒரு சிறிய தீவு பகுதி சுலவேசி தீவு. இங்கு வாழும் டோராஜன் மக்கள் தங்கள் வீட்டில், குடும்பத்தில் யார் இறந்தாலும், அதை மரணமாக கருதுவது இல்லை. ஒருவருக்கு மரணமே இல்லை என நம்பும் இவர்கள் இறந்தவர்களை தங்களுடனேயே வைத்துக் கொள்கின்றனர்.

மாடலிங்கில் கலக்கும் கேரளத்து கூலி தொழிலாளி

கேரள மாநிலம் எல்லாவற்றிலும் சற்று வித்தியாசமானதுதான். தற்போது அதே கேரளாவில் தினக் கூலி தொழிலாளி ஒருவர் மாடலிங்காக மாறி கலக்கி வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் நெட்டை கலக்கி வருகின்றன. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் மம்மிக்கா. 60 வயதான இவர் அதே ஊரில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். பிரபல புகைப்பட கலைஞர் ஷரிக் வயலில் கண்களில் இவர் பட்டதும், இவரது தோற்றமே மாறி விட்டது. உள்ளூரில் கசங்கிய லுங்கியும், அழுக்கு சட்டையுமாக வலம் வந்த அவரை, மேக் கப் கலைஞர்ள் மூலம் அசத்தலான மாடலிங்காக மாற்றினார். கோட்டும் சூட்டும் கையில் டேப் சகிதமாக இவர் ஸ்டைலாக கேட் வாக் வரும் வீடியோக்கள் தற்போது நெட்டை கலக்கி வருகின்றன. இவரது புகைப்படங்கள் நெட்டில் வைரலாகி வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்