முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எச்சரிக்கும் ஆய்வு

தொடர்ந்து மணிக்கணக்கில் தனியாக அமர்ந்து டி.வி. பார்க்கும் குழந்தைகளுக்கு அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் போது பெரிய அளவில் உடல்நலக் கோளாறு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அவர்கள் உடல் எடை அதிகரித்து பருமனாவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆய்வில் அறையில் தனியாக அமர்ந்து டி.வி.பார்க்கும் சிறுமிகளில் 30 சதவீதம் பேரின் உடல் எடை அதிகரித்துள்ளதாம்.

Hiccups, விக்கல்

ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...  நின்று போகும் தீராத விக்கல்! ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு, சர்க்கரையை வாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்!

நுண்ணோக்கியை கண்டு பிடித்தவர் யார் தெரியுமா

ஆண்டனி வான் லியூவென்ஹாக் (Antonie van Leeuwenhock) என்ற டச்சுக்காரர் 1670ஆம் ஆண்டு வாக்கில் சிறு கண்ணாடி வில்லையைப் பயன்படுத்தி முதலாவது நுண்ணோக்கியைக் கண்டுபிடித்தார். பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்ட முதலாவது நுண்ணோக்கியைக் கண்டவர் இவரே. மிக நுட்பமான பொருட்களையும் பல்லாயிரம் மடங்கு பெரிதாகக் காட்டும் திறன் வாய்ந்த நுண்ணோக்கிகளும் இப்போது உள்ளன. தாவரத்தின் உயிரணுக்கள் (plant cell) போன்றவற்றை நுண்ணோக்கியின் துணையின்றிக் காண இயலாது என்பதை நாம் அறிவோம்.

விரைவில் அறிமுகம்

உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை அப்லோடு செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது.

மாறும் துருவங்கள்

பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவதால் 2030-இல் பூமிக்கு ஆபத்து ஏற்படுமாம். காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படுவதால் தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படுமாம். இதை மாக்னெட்டோகெடான் என்று அழைப்பர்.

எந்த மிருகத்தை மனிதனால் பழக்க முடியாது தெரியுமா?

மனிதர்கள் பல்வேறு விலங்குகளையும் செல்லப் பிராணிகளாக வீடுகளில் வளர்க்கின்றனர். ஒரு சிலர் சர்க்கஸ் போன்ற இடங்களில் சிங்கம், புலி, கரடி, யானைகளை கூட நம் சொல் கேட்கும்படி வளர்த்து விடுகின்றனர். ஆனால் ஒரே ஒரு விலங்கு மட்டும் விதிவிலக்கு. அது ஹைனா எனப்படும் கழுதைப்புலி தான் அது. கழுதைப்புலியை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்ப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். எளிதில் கழுதைப்புலிகளுடன் பழகி அவற்றை நம் பேச்சை கேட்க வைக்க முடியாது. இவற்றை பராமரிப்பதற்கு அதிக செலவாகும். அமெரிக்காவில் கழுதைப்புலியை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றம். அதையும் மீறி நாம் நம்முடைய வீட்டில் வளர்த்தால் பக்கத்து வீட்டுக்காரங்களை பதம்பார்த்து விடும். மொத்தத்தில் கழுதைப்புலியை வீட்டில் வளர்ப்பது மிகவும் அபாயகரமானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!