முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ரிக்சாகாரருக்கு ரூ.1 கோடி சொத்து

ஒடிசா மாநிலம் கட்டாக் என்ற இடத்தில் வசித்து வருபவர் Minati Patnaik. 63 வயதான இவர் கணவரை இழந்து விட்டார். கணவரை இழந்த 1 வருடத்துக்குள் தனது மகளையும் இழந்துள்ளார். இதனால் இவர் தனிமையில் வசித்து வந்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்த ரிக்ஷா தொழிலாளி புத்தா சமல் என்பவரும் அவரது குடும்பத்தினரும் தான் எந்த பிரதிபலனும் எதிர்பார்ப்பும் இன்றி Minati Patnaik க்கு உதவி வந்துள்ளனர். இதனால் ஒரு கட்டத்தில் தனது ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துகள், தங்கம் ஆகியவற்றை புத்தா சமல் குடும்பத்தினருக்கு அளிப்பதாக உயில் தயார் செய்து வைத்துள்ளார். இது குறித்து Minati Patnaik கூறுகையில், சிறு வயது முதலே எனது குழந்தையை பள்ளிக்கும், கல்லூரிக்கும் அழைத்து சென்று வருபவர் புத்தா சமல். எனது கணவர் இறந்த பிறகு என்னை மிகவும் கவனத்துடன் எந்த பிரதிபலனும் பாராமல் அவரும், அவரது குடும்பத்தினரும் பராமரித்து வருகின்றனர். எனக்கு பிறகு எதிர்காலத்தில் சட்டரீதியாக அவர்களுக்கு எந்த பிரச்னையும் வரக் கூடாது என்பதற்காக எனது ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்து, நகைகள் ஆகியவற்றை புத்தா சமல் குடும்பத்தினருக்கு உயிலாக எழுதி வைத்துள்ளேன். காசு பணம் என்பதையும் தாண்டி மனித உறவுகள் தான் மதிப்புமிக்கவை என்பதற்கு உதாரணமாக புத்தா சமல் குடும்பத்தினர் கடந்த 25 ஆண்டுகளாக எனது குடும்பத்திற்காக உழைத்துள்ளனர் என்றார் நெகிழ்ச்சியாக. அவரது இந்த கருணையுள்ளதை பாராட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

கூடும் நேரம்

பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள அணு கடிகாரத்தில், ஒரு வினாடி தற்போது கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றம் செயற்கைக்கோள் ஊடுருவல், வானியல் மற்றும் தொலை தொடர்பியல் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

அழிவை நோக்கி....

பூமியில் அடுத்த 1000 ஆண்டுகள் மட்டுமே மனித இனத்தால் வாழ முடியும். இந்த கால இடைவெளிக்குள் ஏற்படும் மிகப்பெரிய இயற்கைப் பேரிடரால் மனித இனம் முற்றிலுமாக அழிந்துவிடும் என்று  ஐன்ஸ்டீனுக்குப் பிறகு மூளை செயல்பாடு அதிகம் கொண்டவராகக் கருதப்படும் பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்.எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

எடையை குறைக்க

காலையில் காபி, டீக்கு பதிலாக, பழச்சாறுகளை பருகுபவர்கள் தான் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. லஸ்ஸி,  பாதாம் பால், பழச்சாறுகள், எருமை பால், வாழைப்பழம்,  ஸ்மூத்தி இவற்றை காலையில் எடுக்கக்கூடாது. ஒரு டம்ளர் சுடுநீரில் 1 டீஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.

அகத்தியர் அருவி

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள அருவி அகத்தியர் அருவி. சுமார் 25 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவியில் ஆண்டு முழுமைக்கும் தண்ணீர் வருவதால், இது வற்றாத ஜீவநதி என்னும் பெயரை பெறுகிறது. இதிலிருந்து உருவாவதுதான் தாமிரபரணி நதி.

நல்லது எண்ணெய்

தலைக்கு மட்டுமின்றி, உடலுக்கும், நல்லெண்ணெய் தேய்த்து, மசாஜ் செய்து குளித்து வந்தால், சருமம் பொலிவோடு, மென்மையாக இருக்கும். மேலும் உடல் சூட்டை தவிர்க்க இது பெரிதும் உதவும். பொடுகுத் தொல்லை இருந்தால், வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியலை மேற்கொண்டால் நீங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!