முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கூடும் நேரம்

பூமியின் சுழற்சி வேகம் குறைந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் உள்ள அணு கடிகாரத்தில், ஒரு வினாடி தற்போது கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றம் செயற்கைக்கோள் ஊடுருவல், வானியல் மற்றும் தொலை தொடர்பியல் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது.

முக்தி அடைய

அசுவமேத யாகம் செய்த சூர்ய வம்சத்தை சேர்ந்த சகரன் எனும் மன்னனின் இறந்துபோன மகன்களுக்கு முக்தி அளிப்பதற்காக கங்கா தேவி பூமியில் பிறப்பெடுத்து கங்கை நதியாக ஓடுவதாக புராணம் கூறுகிறது. இதன் காரணமாகவே கங்கையில் அஸ்தியைக் கரைத்து தங்கள் முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்கின்றனர்.

அழியும் ஆபத்தில்...

இந்தியாவில் தற்போது 780 மொழிகளில், 400 மொழிகள் அடுத்த 50 ஆண்டுகளில் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது என தி பீப்பில்ஸ் லிங்குஸ்டிக் சர்வே ஆப் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஒவ்வொரு மொழி அழியும்போதும், அந்த கலாச்சாரமும் அழியும் ஆபத்துள்ளதாக அது தெரிவிக்கிறது.

இந்திரா நூயி

குளிர்பான உலகில் கொடிகட்டி பறக்கும் பெப்சி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான இந்திரா நூயி, சுந்தர் பிச்சையைப் போலவே சென்னையைச் சேர்ந்தவர். கடந்த 1994ம் ஆண்டில் பெப்சி நிறுவனத்தில் இணைந்த நூயி, 2001-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் சி.இ.ஒ-வாக உயர்ந்தார். வணிகரீதியிலான கொள்கைகளை வகுக்கும் 19 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய-அமெரிக்கர்  இவர்.

வயது தடையில்லை

ஹெலன் வேன் விங்கிள் என்ற 87 வயதான மூதாட்டி, ‘பாடி விங்கிள்’ என்ற பெயரில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர்.இவர் கணக்கு தொடங்கிய மிகக் குறுகிய காலத்திலேயே இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் பாலோவர்ஸ், ட்விட்டரில் 2 லட்சத்து 20 ஆயிரம் பாலோவர்ஸும் உள்ளனர். நடிகை கர்தாஷியன் உடன் இவர் சேர்ந்து இருக்கும் போட்டோவிற்கு 88.3K லைக்குகள் கிடைத்ததாம்.

சீன புல்லெட் ரயில்

சீனாவில், ஃப்யூக்சிங் என்று பெயரிடப்பட்டுள்ள புல்லெட் ரயில், பயணிகள் நெரிசல் உள்ள, சுமார் 1,318 கி.மீ. கொண்ட பெய்ஜிங்-ஷாங்காய் வழித்தடத்தில் பயணத்தைத் தொடங்கியுள்ளது.  இந்த தூரத்தை புல்லெட் ரயில் 5 மணி நேரம் 45 நிமிடங்களில் கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு அதிகபட்சமாக 400 கி.மீ. வேகத்திலும், சராசரியாக மணிக்கு 350 கி.மீ. வேகத்திலும் பயணிக்கும் திறன் பெற்றது. முழுக்க முழுக்க சீனாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் அவசரகாலங்களில் ரயிலின் வேகத்தை தானாகவே குறைக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுப்பாட்டு அறையிலிருந்து புல்லெட் ரயிலை தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் வகையிலான தொழில்நுட்பமும் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறபம்சம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago