முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

லைட் இயர் ஒன்

சூரிய சக்தி மூலம் தானாக சார்ஜ் செய்து கொண்டு, தொடர்ச்சியாக 500 மைல்கள் (805 கி.மீ.) பயணிக்கும் திறன்பெற்ற கார் இப்போது தயாரிக்கப்பட்டுள்ளது. லைட் இயர் ஒன் என்று பெயரிடப்பட்ட இந்த கார்களின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் மூலம் இவை சாத்தியமாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வெயில் காலங்களில் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும் என்பதால் பல மாதங்கள் சார்ஜ் செய்யாமலேயே நாம் காரில் பயணிக்கலாம். வெயில் குறைவான நேரங்களில் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளது கூடுதல் அம்சம். இந்தவகை கார்கள் 2018ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

டாய்லெட் வடிவில் கட்டப்பட்டுள்ள வினோத ஹோட்டலை பற்றி கேள்விபட்டுள்ளீர்களா?

வாடிக்கையாளர்களை கவர்வதற்காக விதவிதமாக ஹோட்டல்களை கட்டுவதை கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் தைவானில் உள்ள தெய்பெய் நகரில் கட்டப்பட்டிருக்கும் ஹோட்டலின் வடிவத்தை கேட்டால் உவ்வே என்று சொல்லத் தோன்றும். ஆனால் அப்படி ஒரு விசித்திர ஹோட்டல் உள்ளது என்பதுதான் உண்மை. அந்த ஹோட்டல் டாய்லெட் வடிவில் கட்டப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அந்த ஹோட்டலில் பயன்படுத்தப்பட்டும் தட்டு, டம்ளர், உணவு பொருள்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் அனைத்தும் கழிவறை பொருள்களைப் போலவே பரிமாறப்படுகின்றன. அட கஷ்டகாலமே.. இப்படி ஒரு ஹோட்டலா என சொல்லத் தோன்றுகிறது அல்லவா.

ஏலம் போனது

2-ம் உலகப்போரின் போது எத்தனையோ உயிர்களை கொல்ல ஆணையிட்ட சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பயன்படுத்திய தொலைபேசி 1945-ம் ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஒரு பாதுகாப்பு கிடங்கு அறையில் கண்டு பிடிக்கப்பட்டது. இது தற்போது ரூ.1 கோடியே 68 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் சாதனை

1984 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஜெர்மனி வீரர் Uwe Hohn என்பவர் தான் அதிகபட்ச தூரத்துக்கு ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளார். அவர் எறிந்த தூரம் எவ்வளவு தெரியுமா 104.80 மீட்டர். அதற்கு முந்தைய சாதனை அமெரிக்காவைச் சேர்ந்த டாம் பெட்ரானோவ் ஈட்டி எறிந்த தூரம் 99.72. ஈட்டி எறிதலில் இதுவரை Uwe Hohn சாதனைக்கு அருகில் கூட செல்ல முடியவில்லை.

மிகப்பெரிய வைரம்

ரஷ்ய வரலாற்றி‌லேயே அதிக மதிப்புள்ள வைரம் ஒன்று ஏலத்துக்கு வந்திருக்கிறது. இதன் எடை 51 கேரட். இவை அனைத்தும் ஜார் மன்னர்கள் சேகரித்து வைத்தவை. இவை சுமார் 300 ஆண்டுகள் வரை பழமையானவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனை ஏலம் எடுக்க செல்வந்தர்கள் முண்டியடிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சே குவேராவுக்கு நேரு

உலக வரலாற்றில் பல்வேறு வேறுபட்ட ஆளுமைகள் சந்தித்துள்ளனர். அவை உலக வரலாற்றையே மாற்றி அமைத்தும் உள்ளன. அதில் இன்றைக்கும் உலக இளைஞர்களின் கவர்ச்சி நாயகனாக திகழும் சே குவேரா முக்கியமானவர். கியூபாவின் நீண்ட கால அதிபரான பெடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரான அவரை கியூப புரட்சி கால கட்டத்தின் போது தங்களுக்கு ஆதரவு அளித்த முக்கிய ஆசிய தலைவரான அன்றைய இந்திய பிரதமர் நேருவை சந்திக்க அனுப்பி வைத்தார். இருவரும் 1959 ஜூன் 30 இல் டெல்லியில் சந்தித்து பேசினர். அப்போது சே குவேராவுக்கு நேரு யானை தந்தத்தால் கைப்பிடி செய்யப்பட்ட குறுவாளை பரிசாக வழங்கினார். அது இன்னும் ஹவானாவில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago