முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பாறைகளை விழுங்கும் டைனோசர்கள்

டைனோசர் என்ற பிரம்மாண்டமான அரிய வகை விலங்கு ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து வந்தனர் கால ஓட்டத்தில் அவை அழிந்து விட்டன அவற்றில் சில விசேஷ குணங்களை கொண்ட டைனோசர்களும் காணப்பட்டன அதில் குறிப்பாக சில வகை டைனோசர்கள் பெரிய பாறைகளைக் கூட அப்படியே விழுங்கி விடுமாம் ஏன் தெரியுமா?  அவற்றின் வயிற்றில் உள்ள இரைப்பையில் காணப்படும் கடினமான உணவுகளை செரிமானம் செய்வதற்கு உதவியாக அவை இவ்வாறு பாறைகளை விட்டுவிடுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்

மாவீரனின் முடிசூட்டும் விழாவைபுறக்கணித்த தாயார் யார் தெரியுமா?

மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் போனபார்ட் (1769-1821) கருதப்படுகிறார். பிரெஞ்சுப் புரட்சி (1787-1799) நடந்த காலத்தில் முக்கியத்துவம் பெறும் நிலைக்கு உயர்ந்த நெப்போலியன், 1804 முதல் 1814 வரை பிரான்சின் பேரரசராக இருந்தார். 1814இல் ஆட்சியை இழந்த பின் மீண்டும் 1815இல் பிரான்சின் பேரரசராக அவர் இருந்தார். 1803 மற்றும் 1815 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலகட்டங்களில் நடைபெற்ற நெப்போலியப் போர்கள் மூலம் அவர் நினைவுகூரப்படுகிறார். நெப்போலியன், தன் தாயின் மீது அதிக அன்பு கொண்டவர். பிரெஞ்சு சக்கரவர்த்தியாக முடிசூடிக் கொண்டபோது, அவரது தாயார் அந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. முடிசூடிவிட்டு விழாவை ஓவியமாக வரையச் சொன்ன நெப்போலியன், தன்னுடைய தாயும் அந்த  விழாவில் கலந்து கொண்டதைப்போல் ஓவியம் வரையும்படி கேட்டுக் கொண்டார். அவ்வாறு வரையப்பட்ட ஓவியம்தான் பிரான்ஸ் அரண்மனையில் இன்னும் இருக்கிறது.

மைக்ரோசிப்

அமெரிக்காவில் ஒரு நிறுவனம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடலில் ஒரு ஊழியருக்கு 300 டாலர் செலவு செய்து மைக்ரோ சிப்களை பொருத்தியுள்ளது. இந்த சிப் அக்சஸ் கார்டு போன்று செயல்படுகிறது. அதாவது அலுவலகம் வரும்போது கதவுகளை திறப்பது, பன்ச் செய்வது, அவர்களுக்கான கணினியை பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு பயன்படுகிறது.

முக்தி அடைய

அசுவமேத யாகம் செய்த சூர்ய வம்சத்தை சேர்ந்த சகரன் எனும் மன்னனின் இறந்துபோன மகன்களுக்கு முக்தி அளிப்பதற்காக கங்கா தேவி பூமியில் பிறப்பெடுத்து கங்கை நதியாக ஓடுவதாக புராணம் கூறுகிறது. இதன் காரணமாகவே கங்கையில் அஸ்தியைக் கரைத்து தங்கள் முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்கின்றனர்.

வழித் தோழனாக

கூகுள் நிறுவனத்தின் மேப் சேவை தற்போது, ஜி.பி.எஸ் மூலம் குரல் வழிகாட்டும் முறை உள்ளிட்ட புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்துள்ளது. மேலும், பெட்ரோல் பங்க், உணவகங்கள், விடுதிகளை தெளிவாக காட்டுகிறது.

புதிய திட்டம்

விண்வெளிக்கு செல்லும் மனிதர்கள் தங்களுடைய சிறுநீரைக் கொண்டே பிளாஸ்டிக் தயாரித்துக் கொள்ளும் புதிய வகை தொழில்நுட்பத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. ஈஸ்ட் மற்றும் கார்பண்டை ஒக்சைட் மூலம் இந்த பிளாஸ்டிக் தயாரிக்கப்படவுள்ளது. மேலும் இதை மூலப் பொருளாக பயன்படுத்தி, 3டி பிரிண்டரில் புதிய பிளாஸ்டிக் பொருட்களை விண்வெளியில் தயாரிக்கலாம். இதனால் உருவாக்கப்படும் பொருட்களை கொண்டு நீண்ட தூரம் விண்வெளி பயணம் மேற்கொள்ளலாமாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago