முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகிலேயே மிக நீளமான அலகு கொண்ட பறவை எது தெரியுமா?

உலகிலேயே மிகவும் நீளமான அலகு கொண்ட பறவை ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெலிகன் பறவைதான் அது. இதன் அலகின் நீளம் கிட்டத்தட்ட 2 அடி அதாவது சுமார் 0.5 மீ.  அரிவாள் மூக்கன் பறவையின் 3.9 அங்குலம் அதாவது 10 செமீ நீளம் கொண்டதாகும். ஹம்மிங் பேர்ட் எனப்படும் அழகிய இசையை எழுப்பும் வானம்பாடி பறவையின் அலகு அதன் உடலை விட நீளமான அலகை கொண்ட ஒரே பறவையாகும். அதே போல நீளமான இறகை கொண்ட கோழி ஜப்பானில் உள்ளது. அதன் இறக்கைகள் சுமார் 35 அடி நீளம் கொண்டவை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..

தவிர்த்தல் நல்லது

நாம் குண்டாவதற்கு, சாப்பிடும் உணவு மட்டும் காரணம் அல்ல. மென்று முழுங்காமல் அவசர அவசரமக உணவை முழுங்குவதால் உங்கள் ஜீரணத் தன்மை பாதிக்கும். இதனால் கொழுப்புகள் சரியாக ஜீரணிக்காமல் உடலிலேயே தங்கும்போது உடல் பருமன் உண்டாகும். மேலும், துரித உணவுகளை தவிர்தலும் குண்டாவதை தடுக்கும்

அதிசய உடல்

மனிதன் உயிர் வாழ உடலில், ஒரே ஒரு நுரையீரல், ஒரு சிறுநீரகம் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். மேலும் பெருங்குடல் நீக்கப்பட்டாலும், அந்தரங்க உறுப்புகள் இல்லாமலும் ஆண், பெண் உயிர் வாழ முடியும். உடலில் தைராய்டு சுரப்பி, மண்ணீரல் நீக்கப்பட்டாலும் ஆபத்து இல்லை.

பிக் பெண்ட்

துபாயில் 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீபா உலகின் உயர்ந்த கட்டிடமாக இருக்கிறது. தற்போது, சுமார் 1,220 மீட்டர் உயரத்திலான கட்டிடம் ஒன்றை நியூயார்க்கில் வடிவமைக்க உள்ளனர். இதன் உயரத்தை விட மிக பெரிய சாதனை என்னவென்றால், இது தலைகீழான U வடிவில் அமைக்கப்படவுள்ளது. இக்கட்டிடத்துக்கு பிக் பெண்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படியும் வினோதம்

அயர்லாந்தில் உள்ள கில்லோர்லின் நகரில், நாட்டின் ராஜாவாக, ஆட்டுக்கு முடிசூட்டியுள்ளனர். அங்கு பழமையான திருவிழாக்களில் ஒன்றான பக்ஃபேர் பண்டிகையின் போது, ஒரு ஆட்டைப் பிடித்து, அதனை நகரம் முழுவதும் ஊர்வலமாகக் கொண்டு செல்வர். அதன்பின் அந்த ஆட்டிற்கு ராஜாவாக முடிசூட்டுவார்களாம். திருவிழா முடியும் வரை அந்த ஆடுதான் அரசனாம்.

கர்நாடக சங்கீதம் சில குறிப்புகள்

கர்நாடக சங்கீதம் குறித்து இன்றைக்கும் பரவலாக பல்வேறு கற்பிதங்கள் நிலவி வருகின்றன. உண்மையில் தமிழிசை தான் பிற்காலத்தில் கர்நாடக இசை என அழைக்கப்பட்டது. அதற்கான குறிப்புகள் சிலப்பதிகாரம் தொடங்கி பல பழந்தமிழ் நூல்களில் உள்ளன. ஆனால் வடமொழி பழைய இலக்கியங்கள் எதிலும் சாஸ்திரிய இசைக்கான குறிப்புகள் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. போலவே தமிழிசை குறித்த கல்வெட்டுகளும் சான்றுகளும் ஏராளமாக உள்ளன என்பதும் கவனிக்கத் தக்கது.எனவே ஒரு காலத்தில் இந்திய நிலப்பரப்பு முழுவதும் பரவியிருந்தது கர்நாடக இசை எனப்படும் தமிழிசைதான். அது பிற்காலத்தில் பல்வேறு இசை வடிவங்களின் கலப்பால் தமிழிசை, கர்நாடக இசை, ஹிந்துஸ்தானி என பிரிவுகளை கண்டது. கர்நாடக  இசையில் தியாகராஜர், ஷ்யாமா சாஸ்திரி, முத்துசுவாமி தீட்சிதர் ஆகியோர் மும்மூர்த்திகளாக போற்றப்படுகின்றனர். அதே போல தமிழிசைக்கும் மும்மூர்த்திகள் என அருணாச்சல கவிராயர், முத்து தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை ஆகியோர் போற்றப்படுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony