முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஆப்பிள் அல்வா

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

ஆப்பிள் அல்வா செய்யத் தேவையான பொருள்கள்; 

  1. ஆப்பிள் - 3.
  2. நெய் - 2 ஸ்பூன்.
  3. சர்க்கரை - 1/2 கப்.
  4. பால் பவுடர் -  2 ஸ்பூன்.
  5. உப்பு - தேவையான அளவு.
  6. ஏலக்காய் -4.
  7. முந்திரி பருப்பு - 10.
  8. திராட்சை -10.
  9. கலர் பொடி - சிறிதளவு.
Method: 

 

ஆப்பிள் அல்வா செய்முறை:-

  1. ஆப்பிள்களை தோல் சீவி  ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.
  2. ஆப்பிளை நறுக்கி  உள்ளே உள்ள விதைகளை எடுக்கவும்.
  3. பின்னர் ஆப்பிள்களை துருவி வைத்துக்கொள்ளவும்.
  4. 4 ஏலக்காய்யை எடுத்து அதை மிக்சியில் போட்டு  அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  5. அடுப்பில் கிடாய் வைத்து 2  ஸ்பூன் நெய் ஊற்றவும்.
  6. நெய் சூடானவுடன் 10 முந்திரி பருப்பு  மற்றும் 10 திராட்சையை போட்டு பொன்னிறமாக  வறுத்து   ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  7. மீதமுள்ள நெயில் துருவி வைத்துள்ள ஆப்பிளை போட்டு பச்சை வாசனை போகும்வரை  5  நிமிடம் நன்றாக வதக்கவும்.
  8. பால் பவுடர்  2  ஸ்பூன் மற்றும் கலர் பொடி சிறிதளவு போட்டு  குறைவான தணலில் அடிபிடிக்காமல் கலந்து விடவும்.
  9. மிக்சியில்அரைத்து வைத்துள்ள ஏலக்காய்யை பொடி மற்றும் சிறிதளவு உப்பு போட்டு கலந்து விடவும்.
  10. தொடர்ந்து குறைவான தணலில் அடிப்பிடிக்காமல் கிண்டி விடவும்.
  11. 1/2 கப் சர்க்கரையை போட்டு கிண்டி விடவும்.
  12. வறுத்து வைத்துள்ள 10 முந்திரி பருப்பு  மற்றும் 10 திராட்சையை போட்டு கலந்து விடவும்.
  13. சுவையான ஆப்பிள் அல்வா ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்