முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

செம்பருத்தியின் மருத்துவ பலன்கள்

 1. செம்பருத்தி தாவரத்தின் வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைந்ததுதான்.
 2. செம்பருத்தி முடியை நன்கு வளர வைக்கிறது,நரைமுடிப் பிரச்சனைகளைக் குணமாக்குகிறது,தலை முடி கருத்து அடர்த்தியாக வளர தொடங்கும்.
 3. செம்பருத்தி பூ உடலில் உள்ள வெப்பம் சமநிலையில் இருக்க உதவுகிறது.
 4. செம்பருத்தி உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்,
 5. செம்பருத்தி பூவை பெண்கள் சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சனைகள் குறைபாடுகள் நீங்கும்.
 6. செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, தினமும் தடவி வர தலை முடி அடர்த்தியாக வளரும்.
 7. செம்பருத்தி பூ, உடல் வெப்பத்தை அகற்றி குளிர்ச்சியை உண்டாக்கும்.
 8. செம்பருத்தி பூ தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை. 
 9. செம்பருத்தி இலையின் சாறு கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. 
 10. கூந்தல் வளர்ச்சிக்கு செம்பருத்தி இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது.
 11. செம்பருத்தி பூ சருமத்தை ஒளிரச் செய்து, சருமத்தை இயற்கையாகப் பளபளக்கச் செய்யும்.
 12. செம்பருத்தி பூவை சாப்பிட்டு வர உடல் உஷ்ண கோளாறுகள் சரியாகும்.
 13. உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் செம்பருத்தி பூவில் நிறைந்துள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்