முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புலிவெந்துலா தொகுதியில் ஜெகன் மோகன் போட்டி

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஏப் 16 - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவெந்துலா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுகிறார். 

கடப்பா மக்களவை தொகுதி எம்பியான ஜெகன்மோகன் ரெட்டி முதன் முறையாக சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடவுள்ளார். அவரது குடும்பத்துக்கு பரிச்சியமான இந்த தொகுதியில் இருந்துதான் ஜெகன்மோகனின் தந்தையான மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஜெகன்மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினரான ஒய்எஸ் அவினாஸ் ரெட்டி, கடப்பா மக்களவை தொகுதியிலும், அவரது தாயார் ஒய்எஸ் விஜயாம்மா விசாகப்பட்டினம் மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். சீமாந்திரா பிராந்தியத்தில் அடுத்த மாதம் 7ம் தேதி மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறுகின்றன. 

இதையொட்டி ஐதராபாத்தில் சீமாந்திரத்துக்கான 175 சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்கள், அந்த பிராந்தியத்தில் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் 24 இடங்களுக்கான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை ஜெகன்மோகன் வெளியிட்டார். ஓங்கோல் மக்களவை தொகுதியில் ஜெகனின் மாமனார் சுப்பாரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அண்மையில் ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைந்த எம்பிக்களான எஸ்பிஒய் ரெட்டி, நந்தியால் மக்களவை தொகுதியிலும், அனந்த வெங்கடராமி ரெட்டி, அனந்தபூர் மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்