முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.ஆர்.பாலு கொள்ளை: கருணாநிதியின் பதில் என்ன? முதல்வர்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.21  - தமிழக முதலமைச்சரும் அ.தி.மு.க. பொதுசெயலாளருமான ஜெயலலிதா வடசென்னை தொகுதியில் தனது கட்சி வேட்பாளரான வெங்கடேஷ் பாபுவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;_

சென்னை மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 203 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சென்னையில் தங்கி வேலை செய்யும் இளைஞர்கள் மற்றும் இங்குள்ள ஏழை மக்கள் தினமும் பசியாற உணவருந்துகின்றனர்.

சென்னைவாசிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வீராணம் நீரை கொண்டு வந்தோம். அது மட்டுமல்லாமல் கடல் நீரை குடிநீராக்க புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என்றார். தி.மு.க.வினர் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் சேது சமுத்திர திட்டத்தை கொண்டு வரவேண்டும் என கருணாநிதி துடியாய் துடிக்கிறார். 

அதே போல் விவசாயிகளின் வாழ்க்கை பெரிதும் பாதிக்கும் என்று தெரிந்தும் சுயநல நோக்கோடு ஸ்டாலினால் ஒப்பந்தம் செய்யப்பட்ட மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு தடை விதித்துள்ளோம். நாகர்கோவிலில் நடந்த தி.மு.க.வினரின் கூட்டத்தில் கலந்து கொண்ட கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி தங்க நாற்கர சாலை திட்டம் மூலம் அக்கட்சியின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளரான டி.ஆர்.பாலு கோடி கோடியாய் கொள்ளையடித்திருக்கிறார் என்று கூறியதற்கு கருணாநிதி என்ன பதில் சொல்கிறார் என்று கேட்டார். 

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்