முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ தளபதி நியமனத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.23 - ராணுவத்துக்கு புதிய தலைமை தளபதி நியமிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருப்பதாகவும், லோக்பால் அமைப்புக்கு தலைவரை நியமிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

 ராணுவ தலைமை தளபதி விக்ரம் சிங்கின் பதவிக் காலம் விரைவில் முடிவுக்கு வருகிறது. இவர் ஓய்வு பெறும் நாளுக்கு இரண்டு மாதங்கள் முன்னதாக புதிய தளபதி பெயரை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதை தொடர்ந்து புதிய தளபதி பெயரை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. மத்திய அரசின் ஆயுள் காலம் எண்ணப்பட்டுவரும் வேளையில் முக்கிய பதவிகளுக்கு புதிதாக யாரையும் நியமிக்க கூடாது என பாஜ கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் பாஜ சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லோக்பால் அமைப்புக்கும் தலைவரை நியமிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. வரும் 27 மற்றும் 28 தேதிகளில் லோக்பால் தலைவர் நியமன கமிட்டி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கமிட்டியில் பிரதமர் மன்மோகன்சிங்,  உள்துறை அமைச்சர் ஷிண்டே. மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம் பெற்றுள்ளார். 

லோக்பாலுக்கு தலைவர் நியமிக்கவும் பாஜ எதிர்ப்பு தெரிவித்தது. பாஜவின் எதிர்ப்பையும் மீறி ராணுவ தளபதி மற்றும் லோக்பால் தலைவரை தேர்தெடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இந்நிலையில் ராணுவ தளபதி நியமனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்