முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோக்கியா ஊழியர் வேலை இழப்புக்கு மத்திய அரசே காரணம்

சனிக்கிழமை, 12 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஜூலை.13;''தமிழகத்தில், 'நோக்கியா' நிறுவனத்தில், தொழிலாளர் வேலை இழப்புக்கு, முந்தைய மத்திய அரசின் நெருக்கடி தான் காரணம்,'' என, அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். சட்டசபையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்றுமுன்தினம் நடந்தது.

மார்க்சிஸ்ட் - சவுந்தரராஜன்: வெளிநாட்டில் இருந்து வரும் நிறுவனங்களுக்கு தரும் சலுகைகளை, உள்ளூர் சிறு தொழில் முனைவோருக்கு தருவதில்லை. தொழில் நிறுவனங்கள் மூடும் நிலையில் உள்ளன.'நோக்கியா' நிறுவனத்தில், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதை அரசால் தடுக்க முடியவில்லை.

உடனே குறுக்கிட்ட தொழில்துறை அமைச்சர் தங்கமணி:'நோக்கியா' நிறுவனத்தைக் கொண்டு வர முதல்வர், பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். 10 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் செய்தது.

ஆனால், முந்தைய, மத்திய அரசு, திடீரென ஒரு சட்டத்தைப் போட்டு, 2,000 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும் என, கிடுக்கிப்பிடி போட்டதால், நிறுவனத்தை மூடும் நிலை வந்தது.

உற்பத்தியின்றி எப்படி, சம்பளம் தர முடியும். வேறு வழியின்றி, அந்நிறுவனம், வி.ஆர்.எஸ்., அறிவித்தது.

தொழிலாளர்களிடம், 'அவசரப்பட வேண்டாம்; ஒரு வாரம் பொறுங்கள்' என, கேட்டோம்.அவர்கள் தான், 3 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் கிடைக்கிறது;இதையும் விட்டால் சிக்கலாக்கி விடுமோ எனக்கருதி, விருப்ப ஓய்வில் சென்று விட்டனர். இன்னும், 900 பேருக்கு, அந்த நிறுவனம், சம்பளம் அளித்து வருகிறது என்றார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்