முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்காரி வீட்டில் ஒட்டுகேட்கும் கருவி: விசாரணைக்கு கோரிக்கை

திங்கட்கிழமை, 28 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை 29 - மத்திய மந்திரி கட்காரி வீட்டில் வெளிநாட்டு உளவு அமைப்புகளால் ரகசியமாக பொருத்தப்பட்டிருந்த அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்க உளவு அமைப்பு இந்த அதிநவீன கருவியை பொருத்தி இருக்க கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக என் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கட்காரி கூறினார். ஆனால் அதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்கவில்லை.

கட்காரி வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி பற்றி முழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து அந்த கருவி காங்கிரஸ் ஆட்சியில் பொருத்தப்பட்டிருக்கலாம் என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

இந்த நிலையிஹ் கட்காரி வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி கைப்பற்றப்பட்டது பற்றி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆச்சரியம் தெரிவித்துள்ளார். அவர் இது பற்றி கூறியதாவது,

இது மிகவும் முக்கியமான பிரச்சினை. கட்காரி வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது பற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பாராளுமன்றத்தில் மத்திய அரசு இது பற்றி உரிய விளக்கமளிக்க வேண்டும். மத்திய மந்திரிகளின் வீடுகளிலேயே தகவல்கள் ஒட்டு கேட்கப்படுவது நல்லதல்ல. இது எப்படி நடந்தது என்று விசாரித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு மன்மோகன்சிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்