முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2016 சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் வெல்லப்போவது உறுதி

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக 2 - தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளும் அண்ணா தி.மு.க. தொகுதிகள் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா உறுதிப்பட கூறினார்.

மயிலாடுதுறை தொகுதிக்கு சொந்தம் கொண்டாடி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பேசுகிறார்.

2016ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் அண்ணா தி.மு.க. போட்டியிட்டு வெல்லப்போவது உறுதி என்றும் முதலமைச்சர் கூறினார்.

நடந்த முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 234 சட்டமன்ற தொகுதிகளில் அண்ணா தி.மு.க. 217 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சட்டசபையில் நேற்றுஉள்ளாட்சித்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. அருட்செல்வன் பேசினார். அவர் பேசும்போது மயிலாடுதுறை தொகுதிக்கு கலை கல்லூரி ஒன்றை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி என்று கூறினார்.

அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து பேசினார்.

நான் இன்று(நேற்று) காலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டபோது யாரும் நன்றி சொல்வார்கள் என்று எதிர்பார்க்க வில்லை. என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 234 சட்டமன்ற தொகுதிகளும் அண்ணா தி.மு.க. தொகுதிகள் தான். உறுப்பினர் மயிலாடுதுறையை சொந்தம் கொண்டாடி பேசுகிறார்.

2016ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மயிலாடுதுறையில் அண்ணா தி.மு.க. போட்டியிட்டு வெல்லப்போது திண்ணம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். (அப்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி பலத்த ஆரவாரம்)

தொடர்ந்து அருட்செல்வன் பேசுகையில், எந்த ஒரு கட்சியும் தொடர்ந்து வெற்றி பெற்ற வரலாறு இல்லை என்று குறிப்பிட்டபோது, அண்ணா தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

உடனே தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களும் எழுந்து கூச்சல் போட்டார்கள். அனைவரையும் அமைதியாக உட்காரும்படி சபாநாயகர் தனபால் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசினார். நடந்து முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 44.3 சதவீத ஓட்டுக்களை பெற்று வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்திருக்கிறது என்று கூறினார்.

தே.மு.தி.க. துணைத் தலைவர் மோகன் ராஜ் பேசுகையில், தேர்தல் கமிஷன் பற்றி ஒரு கருத்தை சொன்னார்.

அப்போது மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் எழுந்து, தேர்தல் கமிஷன் பற்றி குறை சொல்ல உங்களக்கு உரிமை இல்லை. நீங்கள் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வி அடைந்திருக்கிறீர்கள். உள்ளாட்சி தேர்தலில் உங்களது சாயம் வெளுத்துவிட்டது. இடைத் தேர்தல்களிலும் ஒரு இடத்திலும் வெற்றி பெற வில்லை. பார்லிமெண்ட் தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிட்டீர்கள். ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை.10 தொகுதிகளில் டெபாசிட் இழந்தீர்கள் என்று காட்டமாக கூறினார்.

தொடர்ந்து தே.மு.தி.க. துணைத் தலைவர் மோகன் ராஜ் பேச முற்பட்டார். அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் எழுந்து பேசினார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் அம்மாவை தவிர எந்த அரசியல் கட்டி தலைவர்களுக்காகவது நெஞ்சில் தைரியம் இருந்தால் தனித்து நின்று போட்டியிட தயாரா? அப்படி தனித்து போட்டியிட்டால், 234 தொகுதிகளிலும் அவர்கள் டெபாசிட்டை இழப்பார்கள். தனித்து போட்டியிடும் துணிச்சலும், தைரியமும், அம்மா ஒருவருக்கு தான் உண்டு. நெஞ்சில் உறுதி மிக்க தலைவர் அம்மா என்று கூறினார்.

அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து பேசினார்.

நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 234 சட்டமன்ற தொகுதிகளில் 217 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. தனித்து போட்டி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது என்று கூறினார். (அப்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி பலத்த ஆரவாரம்)2016ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் அண்ணா தி.மு.க. போட்டியிட்டு வெல்லப்போவது உறுதி என்றும் முதலமைச்சர் கூறினார்.

நடந்த முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 234 சட்டமன்ற தொகுதிகளில் அண்ணா தி.மு.க. 217 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்றும் முதலமைச்சர் பேசினார்.

தொடர்ந்து அருட்செல்வன் பேசுகையில், அரசியல் வரலாற்றில் தோல்வி அடையாத கட்சிகளே இல்லை என்று கூறியபோது, மீண்டும் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எழுந்து பேசினார்.

வெற்றி தோல்விகள் வரும் , ஆனால் நீங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். டெபாசிட்டை இழந்து இருக்கிறீர்கள். ஆண்டவனுடனும், மக்களுடனும் கூட்டணி என்றீர்கள். ஆனால் கடைசியில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தீர்கள். தோற்றுப்போய் நிற்கிறீர்கள்.

தே.மு.தி.க. துணைத் தலைவர் மோகன் ராஜ் எழுந்து கோபமாக பேசினார். சபாநாயகரை பார்த்து மிரட்டும் தோனியில் பேசினார். அப்போது சபாநாயகர் அவரை எச்சரித்தார். மிரட்டுவது போன்று பேசுவது சரியில்லை. முறையில்லாமல் நடக்காதீர்கள் என்று சபாநாயகர் கடுமையாக எச்சரித்தார்.

தொடர்ந்து உணவு அமைச்சர் காமராஜ் எழுந்து உறுப்பினர் அருட்செல்வனுக்கு 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதலமைச்சர் அம்மா ஓட்டு கேட்டார். அதனால் தான் அவர் அந்த தொகுதியில் வெற்றி பெற்று இங்கு சட்டமன்ற உறுப்பினராக அமர்ந்திருக்கிறார் என்று கூறினார்.

உடனே அருட்செல்வன் எழுந்து, முதலமைச்சர் ஓட்டு கேட்டது உண்மை. எங்களது கேப்டனும் ஓட்டு கேட்டார் என்று கூறினார்.

உடனே அமைச்சர் வைத்திலிங்கம் எழுந்து அவரது தலைவர் ஓட்டு கேட்டதாக கூறினார். அதற்காக அவர் வெற்றி பெறவில்லை. அம்மா ஓட்டு கேட்டதால் தான் அவர் வெற்றி பெற்று வந்திருக்கிறார். உங்கள் தலைவர் ஓட்டுகேட்டதால் தான் வெற்றி பெற்றேன் என்று சொல்கிறீர்களே, பார்லிமெண்ட் தேர்தலில் உங்கள் தலைவர் ஓட்டு கேட்டாரே, ஏன் வெற்றி பெறவில்லை? முதலமைச்சர் அம்மாவினால் தான் நீங்கள் வெற்றி பெற்றீர்கள் என்பதை நடந்த முடிந்த பார்லிமெண்ட் தேர்தலில் மக்கள் வௌிப்படுத்தி விட்டனர் என்று காட்டமாக கூறினார்.

இத்துடன் இந்த விவாதம் முடிவுற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்