முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்சிமன்றக் குழுவில் இருந்து தலைவர்கள் நீக்கம்

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஆக.28 - பாஜகவில் இறுதி முடிவு எடுக்கும் உயர் அதிகார அமைப்பான ஆட்சிமன்றக் குழுவில் இருந்து மூத்த தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

பாஜவின் மும்மூர்த்திகளாக கருதப்பட்ட வாஜ்பாய், அத்வானி, ஜோஷி ஆகிய மூவரும் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வழிகாட்டுக் குழுவில் (மார்கதர்ஷக் மண்டல்) சேர்க்கப்பட்டுள்ளனர். 5 உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவில் மோடி, ராஜ்நாத் ஆகியோர் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.

பாஜக தேசிய தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட அமித்ஷா கட்சியின் நிர்வாக அமைப்பை மாற்றி அமைத் துள்ளார். கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசித்த பிறகு அமித்ஷா இந்த மாற்றங்களை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கட்சியின் பொதுச் செயலாளர் ஜகத் பிரகாஷ் நட்டா ஆகியோர் ஆட்சிமன்றக் குழுவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும், தேர்தலின்போது பாஜக வேட்பாளர்களை இறுதி செய்யும் மத்திய தேர்தல் கமிட்டியிலும் இடம்பெற்றுள்ளனர்.

அமித்ஷா தலைமையிலான கட்சியின் ஆட்சிமன்றக் குழுவில் இனி, மோடி, ராஜ்நாத், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி, அனந்தகுமார், தாவர்சந்த் கெலாட், சிவராஜ் சிங் சவுகான், ஜகத் பிரகாஷ் நட்டா, ராம்லால் ஆகிய 12 பேர் இடம் பெறுவார்கள்.

பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டியும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து உ.பி. மூத்த தலைவர் வினய் கத்தியார் நீக்கப்பட்டுள்ளார். பாஜக மகளிர் அணி முன்னாள் தலைவர் சரோஜ் பாண்டே நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக, மகளிர் அணியின் தற்போதைய தலைவர் விஜயா ரஹக்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.

15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த கமிட்டியில் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஜுவல் ஓரம் இக்குழுவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேந்திர மோடி, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி, அனந்தகுமார், தாவர்சந்த் கெலாட், சிவராஜ்சிங் சவுகான், ஜகத் பிரகாஷ் நட்டா, ராம்லால், ஷாநவாஸ் உசேன் ஆகியோர் மத்திய தேர்தல் கமிட்டியின் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்