முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடிபாடுகளுக்கு இடையே பிணங்கள் இல்லை: அரசு தாக்கல்

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.29 - மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிடம் இடிபாடுகளுக்கு இடையே பிணங்கள் எதுவும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை அடுத்துள்ள மவுலிவாக்கத்தில், கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி 12 அடுக்கு மாடிக்கட்டிடம் சரிந்து விழுந்து 100 -க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த அடுக்கு மாடிக்கட்டிடம் கட்டுவதற்கு விதிகளை தளர்த்தி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து ö சய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனு கடந்த 4-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக நீதிபதி ரெகுபதி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் குறித்து சில கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியிருந்தார்கள்.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி, நீதிபதி ரெகுபதி தலைவராக இருக்கும் மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்தார்.

அதேபோல, கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில், தற்போதைய நிலை குறித்தும் ஒரு அறிக்கையையும் அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்தார். அந்த அறிக்கைøயில், கட்டிடம் இடிந்து விழுந்ததும், மீட்பு படையினர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சரும் நேரடியாக சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். இந்த சம்பவத்தில் 61 பேர் பலியாகியுள்ளனர். 27 பேர் படுகாயமடைந்துள்ளனர். பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், படுகாயமடைந்தவர்களுக்கும் தமிழக அரசு உரிய நிவாரண தொகையை வழங்கியுள்ளது. கட்டிட இடிபாடுகளுக்கு இடையே எந்த பிணம் இல்லை’ என்று கூறப்பட்டு இருந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் பி.வில்சன் ஆஜராகி கூறியதாவது:-

மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. ஏற்கனவே, மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் அவர் இருப்பதால், அவரால் எப்படி கட்டிடம் இடிந்து விழு ந்த சம்பவத்தை விசாரிக்க முடியும்? என்று இந்த ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

ஆனால், இந்த நிலையில் நீதிபதி ரெகுபதி கடந்த 25-ந் தேதி அவசர அவசரமாக தன்னுடைய அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளார்.

அதேநாளில், இந்த வழக்கை விசாரித்த மாங்காடு போலீசாரும், குற்றப்பத்திரிகையை ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.

அட்வகேட் ஜெனரல் :- மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் 90 சதவீத வழக்குகள் பைசல் செய்யப் பட்டுள்ளது. நீதிபதி ரெகுபதி தலைமையிலான விசாரணை கமிஷனில், அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி. ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிபுணர்கள் பலர் இடம் பெற்று, பல்வேறு கோணங்களில் வி சாரணை நடத்தி, அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்துள்ளனர். தெருவில் பேசுகின்ற புரளி பேச்சுக்களை எல்லாம் வழக்காக தாக்கல் செய்ய முடியாது.

நீதிபதிகள்: - அந்த அறிக்கையில் யார் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது?

அட்வகேட் ஜெனரல்:- கட்டிடம் கட்டிய கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட 8 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 600 சாட்சிகளின் வாக்குமூலம், 200 ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நபர் கமிஷன் அறிக்கையை தயாரிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள்:- இந்த அடுக்குமாடி கட்டிடம் கட்டுவதற்கு எந்த அதிகாரி அனுமதி வழங்கினார்?

அட்வகேட் ஜெனரல்:- சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் (சி.எம்.டி.ஏ.வில்) உள்ள அடுக்குமாடி கட்டிடம் கமிட்டி, இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

நீதிபதிகள்:- இவ்வளவு பெரிய துயர சம்பவம் நடந்துள்ளது. நாங்கள் மவுலிவாக்கம் கட்டிடம் இடிபாடுகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல், எதிர்கால நலன்களையும் மனதில் கொண்டு இந்த வழக்கை விசாரிக்கின்றோம். இந்த வழக்கு விசாரணையை வருகிற அக்டோபர் 13-ந் தேதிக்கு தள்ளிவைக்கின்றோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்