முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் விஜய் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 26 அக்டோபர் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, அக் 27 - விஜய் நடித்த கத்தி படம் கேரளாவில் 200 தியேட்டர்களில் வெளியானது. கேரளாவிலும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனார் கத்தி படம் வெளியானதையொட்டி திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் அவரது கட்அவுட்டை வைத்து பாலாபிஷேகம் செய்தனர். பாலக்காடு அருகே வடக்கான் சேரியில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்கள் விஜய் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடத்தினர். அப்போது உன்னிகிருஷ்ணன் என்ற ரசிகர் 30 அடி உயர கட்அவுட்டில் இருந்து தவறி விழுந்தார். இந்த நிலையில் பலியான ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். வ

விஜய் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

வடக்கான் சேரியில் எனது ரசிகர் உன்னிகிருஷ்ணன் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய முயன்ற போது தவறி விழுந்து இறந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினரின் வேதனையில் நானும் பங்கெடுக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். ரசிகர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இது போன்ற செயலில் ஈடுபட கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்