முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை தாக்குதல் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வலியுறுத்தல்

புதன்கிழமை, 26 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

மும்பை - மும்பை தாக்குதல் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதல் சம்பவம் 6-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி தாக்குதலில் பலியான அப்பாவி மக்களுக்கும், தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிர்நீத்த வீரர்களுக்கும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி செலுத்தினார்.
மும்பை தாக்குதல் வழக்கு விசாரணையை பாகிஸ்தான் அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராஜ்நாத் சிங், வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். 166 உயிர்களை பறித்த குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என கூறினார்.
கடந்த 2008-ம் மும்பையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 166 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஜாகிர் உர் ரஹ்மான் லக்வி உள்பட பலர் மீது பாகிஸ்தான் பயங்கரவாத நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து