முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2024      தமிழகம்
bus-2022 08 25

Source: provided

சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. 

தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. 

வெயிலுக்கு மத்தியில் சாலைகளில் வாகனங்களை இயக்குவது கடும் சவாலாக உள்ளது. இந்த நிலையில், வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநரின் இருக்கையின் அருகே பேட்டரியால் இயங்கும் மின்விசிறி அமைக்கப்பட உள்ளது. 

முதற்கட்டமாக 1,000 பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கைகளில் பேட்டரி மின்விசிறி திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது 250 பேருந்துகளில் ஓட்டுநர் இருக்கையில் மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து