முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று திருவண்ணாமலையில் தீபத் திருவிழா

வியாழக்கிழமை, 4 டிசம்பர் 2014      ஆன்மிகம்
Image Unavailable

திருவண்ணாமலை - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று நடைபெறுகிறது. 2,688 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தைக் காண 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலை நகரில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தீபக் கொப்பரை அண்ணாமலைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்வு நடந்தது. அண்ணாமலையார் கோயிலில் தீபக் கொப்பரைக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங் கள் முழங்க சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கோ பூஜைக் குப் பிறகு கோயில் யானை ஆசீர்வாதத்துடன் தீபக் கொப் பரை 2,688 அடி உயரம் உள்ள அண்ணாமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தீபக் கொப்பரையை சுமந்து செல்லும் சாவல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பரம்பரையினர் கொப்பரையைத் தூக்கிச் சென்றனர்.
தீபத் திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலை புருஷா முனி வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும். மாலையில் தங்க விமானத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, அர்த்தநாரீஸ்வரர் காட்சி தர மாலை 6 மணியளவில் அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து