முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை - நெல்லையில் வரும் 13, 20ல் பாஸ்போர்ட் மேளா

புதன்கிழமை, 10 டிசம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

மதுரை - மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் வரும் 13 மற்றும் 20ம் தேதிகளில் சிறப்பு பாஸ்போர்ட் மேளா நடத்தப்படுகிறது. இது தொடர்பாக மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். மணீஸ்வரராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
சிறப்பு மேளாவில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் பதிவு செய்து முன்பதிவு தேதி பெற்றுக் கொள்ள வேண்டும். இதற்கென மதுரை சேவை மையத்துக்கு 650 முன்பதிவும், திருநெல்வேலிக்கு 350 முன்பதிவும் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்ப பதிவேட்டு எண்ணுடன் மதுரை அல்லது திருநெல்வேலி பாஸ்போர்ட் சேவை மையத்தில் சிறப்பு மேளா நடைபெறும் நாள்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலக ஆளைகையின் கீழ் உள்ள 9 மாவட்டங்களின் விண்ணப்பதாரர்கள், மேற்குறிப்பிட்ட இரு சேவை மையங்களில் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஏதேனும் ஒரு மையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இது தவிர பாஸ்போர்ட் புதுப்பிக்க விரும்புவோர் குழந்தைகள், அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்கனவே காவல் துறை அறிக்கையில் பெற்றிருந்து எதிர்மறை குறிப்புகள் இல்லாத நிலையில் தாமதம் இல்லாமல் புதிய பாஸ்போர்ட் வழங்கப்படும். அதே போல் 15 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு பெற்றோரின் பாஸ்போர்ட் அடிப்படையில் காவல்துறை அறிக்கை இல்லாமல் புதிய பாஸ்போர்ட் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட துறையில் தடையின்மை சான்று பெற்று எதிர்மறை குறிப்புகள் இல்லாத அரசு ஊழியர்களுக்கும் காவல் துறை அறிக்கை இல்லாமல் பாஸ்போர்ட் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட 3 பிரிவினரில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்தோர் சிறப்பு மேளாக நடைபெறும் நாள்களில் மதுரை சேவை மையத்தில் காலை 9.30 மணி முதல் காலை 11 மணிக்குள், ராமநாதபுரம், தேனி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தோர் காலை 11 முதல் பகல் 12.30 மணிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த திருநெல்வேலி சேவை மையத்தில் காலை 9.30 முதல் காலை 11 மணிக்குள், கன்னியாகுமரி மாவட்டத்தினர் காலை 11 முதல் பகல் 12.30 மணிக்குள் சமர்ப்பிக்கலாம். எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த பாஸ்போர்ட்டாக இருந்தாலும் எவ்வித அபராதமும் இன்றி புதுப்பித்துக் கொள்ளலாம். பாஸ்போர்ட் தொலைந்து விட்டாலும் உரிய விவரங்களை தெரிவித்து புதிய பாஸ்போர்ட் பெறலாம். இது தொடர்பான விவரங்களுக்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தை 0452-2520795 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து