முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித் ஷா சென்னை வருகை

திங்கட்கிழமை, 15 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டம் சென்னையை அடுத்த மறைமலைநகரில் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெற உள்ளது..
இந்த நிலையில், அமித்ஷா டிசம்பர் 20-ஆம் தேதி சென்னை வருகிறார். கட்சிப் பணிக்காக அமித்ஷா வருவது இதுவே முதல்முறையாகும். மறைமலை நகரில் மாலை 4.30 மணியளவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழக பிஜேபியினர் தீவிரமாகச் செய்து வருகின்றனர். பிஜேபியின் தேசிய நிர்வாகிகளும், தமிழகத் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.அதன்பின், டிசம்பர் 21-ம் தேதி தியாகராய நகரில் உள்ள பிஜேபி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் கட்சிப் பணிகள் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.அமித்ஷாவின் வருகைக்குப் பிறகு, தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து