முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல சினிமா இயக்குனர் பாலசந்தருக்கு தீவிர சிகிச்சை

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      சினிமா
Image Unavailable

சென்னை - பிரபல சினிமா இயக்குனர் கே. பாலசந்தருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புகழ்பெற்ற திரைப்படங்களை உருவாக்கி தமிழ் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குனர் கே. பாலசந்தர். அவரால் அறிமுகம் செய்யப்பட்டவர்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கியமானவர்கள்..
85 வயதாகும் பாலசந்தர் தாதா சாகேப் விருது பெற்றவர். நேற்றுமுன்தினம் கே.பாலசந்தர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். வயது முதிர்வு காரணமாகவும், மூச்சுத் திணறல் காரணமாகவும் அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மருத்துவமனைக்கு சென்று பார்த்த ரஜினிகாந்த் பாலசந்தரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார். யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
நேற்று நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி, நடிகைகள் குஷ்பு, கே.ஆர்.விஜயா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்தனர். நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி, நடிகைகள் குஷ்பு, கே.ஆர்.விஜயா உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து