முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் ஆனந்தனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - அமைச்சர் ஆனந்தனுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று சென்னை ஐகோர்ட் நீதிபதிஉத்தரவிட்டார்.
சென்னை ஐகோர்ட்டில் திருப்பூர் காந்திநகரைச் சேர்ந்த பெண் ஜெயமணி (வயது 33) தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
நான் எனது தாயார் வீட்டில் குழந்தைகளுடன் வசிக்கிறேன். ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி தொழிலை செய்து வருகிறேன். அ.தி.மு.க. கட்சியிலும் உறுப்பினராக இருக்கிறேன். இந்து அறநிலையத் துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் இருந்தபோது (தற்போது வனத்துறை அமைச்சர்) 2013ம் ஆண்டில், அந்தத் துறைக்கான இடத்தை எனக்கு ஒதுக்குவதற்காகவும், திருப்பூர் அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளராக ஆக்குவதற்காகவும் ஒரு கோடி ரூபாயை அவருக்கு கொடுத்தேன்.ஆனால் அவர் சொன்னபடி எதையும் எனக்குச் செய்யவில்லை. எனவே அந்தத் தொகையை திருப்பிக் கேட்டேன். ஆனால் அதைத் தராமல் அவர் ஏமாற்றி வருகிறார்.
மேலும் என்னை மிரட்டியதோடு, என்னிடமிருந்த அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை பறித்து, அதை அழித்துவிட்டார். எனது மகனை கடத்தி விடுவதாகவும், மகளை கற்பழித்து விடுவதாகவும் மிரட்டினார். இதுதொடர்பாக நான் ஏற்கனவே அவர் மீது முதல்அமைச்சர் தனிப்பிரிவு, அ.தி.மு.க. கட்சி அலுவலகம், போயஸ் தோட்டம் ஆகிய இடங்களில் கடந்த நவம்பர் 2ந் தேதி புகார் கொடுத்தேன்.
இம்மாதம் 1ந் தேதி திருப்பூரில் உள்ள வீரபெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கு வந்த அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் என்னை கேவலமாகத் திட்டினார். அவரது ஆட்கள் என்னிடமிருந்த வி.ஐ.பி. சீட்டை பறித்தனர்.
4–ந் தேதியன்று ராயபுரத்தில் உள்ள எனது அலுவலகத்தில் எனது தாயார் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் 4 பேர் வந்து, அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தனின் சொற்படி கேட்காவிட்டால், குடும்பத்தோடு கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிச் சென்றனர்.
எனவே இதுகுறித்து திருப்பூர் போலீஸ் கமிஷனர், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஆகியோரிடம் 8ந் தேதி புகார் கொடுத்தேன். இதுவரை அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது பணத்தை மீட்டுத் தரவில்லை.
தற்போது நானும் எனது குடும்பத்தினரும் தெருவுக்கு வந்துவிட்டோம். எனவே நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆஜராகி, இந்த மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து நீதிபதி, ‘இந்த மனுவை நீங்கள்தான் தாக்கல் செய்துள்ளீர்கள்! மனு விசாரணைக்கு வரும்போது, அதன் மீது வாதங்களை முன்வைக்காமல், தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது சரியானது அல்ல. இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்து, இந்த ஐகோர்ட்டை அரசியல் மேடையாக்காதீர்கள்! இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து