முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன கேளிக்கை விடுதியில் தீ: 11 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் - சீன கேளிக்கை விடுதி ஒன்றில் நேரிட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர்.
அந்த நாட்டின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஹூவாங் குவான் நகர கேளிக்கை விடுதியில் இந்த விபத்து நேரிட்டது. காயமடைந்த 24 பேரில் 13 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சீன அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹூவா கூறியுள்ளது.
அந்த கேளிக்கை விடுதியின் சட்டப்பூர்வ பிரதிநிதியான காங் வெங்காய் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தை தொடர்ந்து ஹூவாங்குவான் நகரம் அமைந்துள்ள சாங்குவான் மாவட்டத்தில் உள்ள அனைத்து கேளிக்கை விடுதிகளையும் மூடி அதன் தீ விபத்து தற்காப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து