முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9444 கிராம் தங்கத்தினை பயனாளிகளுக்கு அமைச்சர்கள் வழங்கினார்கள்

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - மக்களின் முதல்வர் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையாளர், விக்ரம் கபூர், தலைமையில், குடும்பநலத்துறை பொதுமக்களின் நலன்களுக்காக பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு வருகிறது.
மக்களின் முதல்வர் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி வழிகாட்டுதலின்படி, நேற்று சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள திறந்தவெளி அரங்கில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் பா. வளர்மதி நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ். கோகுல இந்திரா 2014-15ம் நிதியாண்டில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ், 2361 நபர்களுக்கு காசோலையாக ரூ.8,85,50,000/- மற்றும் 9444 கிராம் தங்கத்தினை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
தமிழக முதலமைச்சர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பத்தாம் வகுப்பு படித்த ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ரூ. 25,000/- மற்றும் 4 கிராம் தங்கம், பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ. 50,000/- மற்றும்
4 கிராம் தங்கமும் 17.05.2011 முதல் வழங்க அரசாணை பிறப்பித்து, இத்திட்டத்தை 06.06.2011 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் ஏழு பயனாளிகளுக்கு ரூ.25,000/- மற்றும் ரூ.50,000/-க்கான காசோலை மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.
ஏழைப் பெண்களுக்கான நிதியுதவித் திட்டம் சமுதாயத்தில் நலிவுற்ற ஏழைப் பெண்களுக்கு உரிய காலத்தில் திருமணம் முடித்து சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து பெற வழிவகுக்கிறது. இத்திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தொகைக்குட்பட்ட பயனாளிகளின் பெண் கல்வியின் தரம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது,
மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில், தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 659 கோடி ரூபாய் செலவில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 369 ஏழைப்பெண்களுக்கு தலா 25,000 ரூபாய் வீதம் நிதியுதவியும், திருமாங்கல்யம் செய்ய தலா 4 கிராம் தங்கம் வீதம் 1,042 கிலோ தங்கமும், பட்டம் அல்லது பட்டயம் பெற்ற 1 லட்சத்து 18 ஆயிரத்து 125 ஏழைப்பெண்களுக்கு தலா 50,000 ரூபாய் வீதம் 591 கோடி ரூபாய் திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வீதம் 473 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கருணை உள்ளத்துடன் ஏழை எளிய பெண்களின் திருமணத்திற்காக வழங்கியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான்.
வறுமையை முற்றிலும் ஒழித்து, ஏழை என்ற சொல்லே இல்லாத மாநிலமாக, தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது தான் மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் இலட்சியம் ஆகும். எனவே எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற, உயர்ந்த நோக்கத்தில், பசிப்பிணியை போக்க விலையில்லா அரிசி, தாய்மார்களின் பணிச்சுமையை போக்க விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி, கிராமப்புற பெண்களின் பொருளாதாரம் மேம்பட விலையில்லா மாடு மற்றும் ஆடுகள் வழங்கியும், அவற்றை முறையாக பேணி காக்க கொட்டகை அமைத்திடவும், நடவடிக்கை மேற்கொண்டவர் நமது மக்களின் முதல்வர் இதயதெய்வம் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான்.
மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா ஏழை மாணவர்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். முக்கியமாக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, நோட்டு புத்தகம், பாட புத்தகம், 4 செட் சீருடைகள், புத்தகப்பை, கணித உபகரணப் பெட்டி, புவியியல் வரைபட நூல், வண்ணப்பென்சில்கள், பேருந்து பயண அட்டை, காலனிகள், 13 வகையான சத்துணவு திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை இலவசமாக வழங்கி மாணவர்களின் நலன் காத்தவர் இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்கள் தான்.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் """"அரசை தேடி மக்கள்"" என்ற நிலையை மாற்றி, """"மக்களை தேடி அரசு"" என்ற உன்னத நிலையை ஏற்படுத்தும் வகையில், மக்களின் முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள், அம்மா திட்டத்தை தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா , ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக மலிவு விலை அம்மா உணவகத்தை, சென்னை மாநகராட்சியில் துவக்கினார்கள். பின்னர் இத்திட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு விரிவுபடுத்தி, இந்திய மாநிலங்களுக்கு மட்டுமின்றி, உலக நாடுகளுக்கும் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் திகழச் செய்தவர் மக்களின் முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான். சென்னை மாநகராட்சியில், 2011 - 2012 நிதியாண்டு முதல் 2013 - 2014 ஆம் நிதியாண்டு வரை, 12 ஆயிரத்து 768 பயனாளிகளுக்கு, 47 கோடியே 36 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், 51 ஆயிரத்து 72 கிராம் தங்கமும் வழங்கி, நலிவுற்ற ஏழை பெண்களுக்கு திருமணம் முடித்து, சமுதாயத்தில் உரிய அந்தஸ்து பெற, மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் பேருதவியாக விளங்குகிறது.
மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, 2014 - 2015 ஆம் நிதியாண்டில், இன்றைய தினம் சென்னை மாநகராட்சி பகுதியில் வசிக்கும், 2 ஆயிரத்து 361 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இத்திட்டத்தின் மூலம், இப்பயனாளிகளுக்கு 8 கோடியே 85 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், 9 ஆயிரத்து 444 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.
மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களையும், தமிழக வளர்ச்சி திட்டங்களையும், மத்திய அரசின் உதவியின்றி நிறைவேற்றி, """"திட்டங்களுக்காக மக்கள் அல்ல"" """"மக்களுக்காக திட்டங்கள்"" என்று இந்திய நாடே வியக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்
மேலும், சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் பா. வளர்மதி பேசியதாவது,
மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய திட்டமான ஏழைப்பெண்களுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ், சென்னை மாநகராட்சி மாவட்ட குடும்பநலத்துறை சார்பாக 2011-12 நிதியாண்டில் காசோலையாக ரூ.13,10,00,000/- மற்றும் 14,800 கிராம் தங்கம் 3700 பயனாளிகளுக்கும், 2012-13ம் நிதியாண்டில் காசோலையாக ரூ.16,30,75,000/- மற்றும் 17,696 கிராம் தங்கம் 4424 பயனாளிகளுக்கும், 2013-14ம் நிதியாண்டில் காசோலையாக ரூ.17,95,50,0008/- மற்றும் 18,576 கிராம் தங்கம் 4644 பயனாளிகளுக்கும், ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக வழங்கப்பட்டுள்ளது என்றும், மேலும் தற்போது 2014-15ம் நிதியாண்டில் காசோலையாக ரூ.8,85,50,000/- மற்றும் 9444 கிராம் தங்கம் 2361 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் பா. பென்ஜமின் சென்னை மாநகராட்சி ஆணையாளர், .விக்ரம் கபூர் , துணை ஆணையர் (சுகாதாரம்) த. ஆனந்த் , சட்டமன்ற உறுப்பினர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து