முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடந்ததை மறந்து விட்டு ஒற்றுமையாக பாடுபட வேண்டும்: ராஜபக்சே

வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2014      உலகம்
Image Unavailable

கொழும்பு - இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டு போரை மறந்து நாட்டு முன்னேற்றத்துக்காக ஒன்றுபட வேண்டும் என்று இலங்கை தமிழர்களுக்கு அந்த நாட்டு அதிபர் ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் இதுவரை இல்லாத வகையில் மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடும் அவர், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முல்லைத்தீவு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியதாவது,

ஈரான், லிபியா, எகிப்து போன்ற நாடுகளில் அரசுக்கு எதிரான போராட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுள்ளது. அதைப் போன்ற நிலை நமது நாட்டில் ஏற்பட கூடாது. நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். நடந்தவற்றை எல்லாம் மறந்து விட்டு நாட்டு வளர்ச்சிக்காக தமிழர்கள் ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என்றார். போரின் துயரங்களில் இருந்து அந்த பகுதி மக்கள் இன்னும் மீளாத நிலையில் அவரது உரையில் விடுதலைப்புலிகளுடனான போர் குறித்து பேசுவதை அவர் தவிர்த்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாசகர் கருத்து

2 கருத்துகள்

  1. Anonymous December 20, 11:31

    40,000 தமிழ் மக்களின் உயிர்களை உரிஞ்சிக்குடித்து விட்டு, இப்பொழுது ஏப்பப்பேச்சா பேசுகிறான்

    Reply to this comment
  2. Anonymous December 20, 11:33

    40,000 தமிழ் மக்களின் உயிர்களை உரிஞ்சிக்குடித்து விட்டு, இப்பொழுது ஏப்பப்பேச்சா பேசுகிறான்

    Reply to this comment
    View all comments

    வாசகர் கருத்து