முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் - ஜார்கண்டில் இன்று ஓட்டு எண்ணிக்கை

திங்கட்கிழமை, 22 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

ஸ்ரீநகர் - ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில்  இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீர் , ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 25ம் தேதி தொடங்கியது. 5 கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் சராசரியாக 65 சதவீ த வாக்குகளும், ஜார்கண்டில் 66 சதவீத வாக்குகளும் பதிவாகின. 
தீவிரவாதிகள் அச்சுறுத்தலையும் மீறி இந்த தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் அதிகம் பேர் வாக்களித்திருந்தனர். இங்கு  சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத அளவுக்கு வாக்குகள் பதிவாகி இருந்தன. ஜார்கண்ட் மாநிலத்தில் சராசரியாக 66 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த மாநிலத்தில் நக்சலைட்டுகளின் அச்சுறுத்தலையும் மீறி அதிகளவில் இங்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது. பலத்த பாதுகாப்புக்கு இடையே நடந்த இந்த தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு  செய்தனர். ஜார்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து நடத்தப்பட்ட தேர்தல்களில் தற்போது நடந்த தேர்தலில்தான் அதிகபட்ச வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலை காட்டிலும் 9 சதவீத வாக்குகள் அதிகம் பதிவாகி உள்ளன. இரு மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.
ஜம்மு காஷ்மீரில் பாஜகவுக்கும் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்து வரும் முப்தி முகமது சயீத் தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சிக்கும் இடையே போட்டி  நிலவி வருவதாகவும் இங்கு தொங்கு சட்டசபையே அமையும் எனவும், ஜார்கண்டில் பாஜ பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்றும், ஆளும் முக்திமோர்ச்சா 2ம் இடத்தை பிடிக்கும் எனவும்  தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து