முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

மெல்பர்ன் - இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டின் முதல் நாளான நேற்று ஆஸ்திரேலியா 259 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டெஸ்ட் மற்றும் புத்தாண்டுக்கு முந்தைய 'பாக்சிங் டே' டெஸ்ட் மெல்பர்ன் நகரிலுள்ள எம்சிஜி மைதானத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். கிறிஸ் ரோஜர் மற்றும் டேவிட் வார்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஆனால் 6 பந்துகளை மட்டுமே சந்தித்த வார்னர் ரன் ஏதும் எடுக்காமல் உமேஷ் யாதவின் அருமையான பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற தவானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது ஆஸ்திரேலிய அணி ரன் ஏதும் எடுக்கவில்லை.
இருப்பினும் அதன்பிறகு களமிறங்கிய ஷேன் வாட்சனும், ரோஜரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 115ஆக இருந்தபோது, ரோஜர்ஸ் மற்றும் வாட்சன் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷமி பந்து வீச்சில் கீப்பர் டோணியிடம் கேட்ச் கொடுத்து ரோஜர்ஸ் வெளியேறிய நிலையில், அடுத்த ஓவரிலேயே அஸ்வின் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வாட்சன் நடையை கட்டினார்.
ஷான் மார்ஸ் 32 ரன்களில் ஷமி பந்து வீச்சிலும், ஜோ பர்ன்ஸ், 13 ரன்களில், உமேஷ் யாதவ் பந்து வீச்சிலும் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நங்கூரமிட்டு ஆடி வருகிறார். அவர் 158 பந்துகளில் 72 ரன்களுடனும், ஹேடின் 23 ரன்களுடனும் களத்தில் நின்ற நிலையில் இன்றைய ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. எனவே, டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளின் தொடக்க ஆட்ட நேரம் இரு அணிகளுக்குமே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து