முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கெஜ்ரிவாலுடன் டீ குடிக்க ரூ.20 ஆயிரம்: ஆம் ஆத்மி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2014      அரசியல்
Image Unavailable

புது டெல்லி - டெல்லி மாநில சட்டசபைக்கு வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் அட்டவணை ஜனவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி தேர்தலில் இந்த முறையும் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்படவுள்ளது. கடந்த முறை எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் அங்கு நிலையான ஆட்சி ஏற்படவில்லை. ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்து முதல்வரான ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 49 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார். பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த அவர் மீ ண்டும் டெல்லி சட்டசபை தேர்தலில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுவதால் நிதி திரட்டும் நடவடிக்கைகளில் கெஜ்ரிவால் ஈடுபட்டுள்ளார். கடந்த மாதம் அவர் மும்பை, கொல்கத்தா, பெங்களூர் நகரங்களுக்கு சென்று நிதி திரட்டினார். இதையடுத்து அவர் இன்று டெல்லியில் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் கலந்து கொள்பவர்கள் ரூ . 20 ஆயிரம் கட்டணம் செலுத்தி கெஜ்ரிவாலுடன் அமர்ந்து டீ குடிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நிறைய பேர் தங்களது பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே சமீபத்தில் கெஜ்ரிவால் ஆம்ஆத்மி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதோடு அந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட தொடங்கியுள்ளார். 49 நாட்களில் பதவியை விட்டு ஓடியதால் அவர் மீது அதிருப்தி அடைந்துள்ள மக்கள் கெஜ்ரிவாலை தங்கள் பகுதிக்குள் நுழைய விடாமல் விரட்டுகிறார்களாம். நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் மீது முட்டைகள் வீச சிலர் முயன்றுள்ளனர். ஆம் ஆத்மி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் கூடுதல் இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக  தீவிரமாக தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து