முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2014 அதிவெப்பமான ஆண்டு: அமெரிக்க விஞ்ஞானிகள்

திங்கட்கிழமை, 19 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் - 2014ஆம் ஆண்டு பூமியின் அதிகமான வெப்பமடைந்த ஆண்டாக அமெரிக்க அரசின் இரு அறிவியல் அமைப்புகள் கூறியுள்ளன. 

இதுகுறித்து நாஸா விண்வெளி ஆய்வுக்கழகம் மற்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) நடத்திய ஆய்வின் அடிப்படையில் தட்பவெப்ப சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு உலக அளவில் பசுமை இல்ல வாயுக்களினால் ஏற்படுத்தும் மாசுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது. 

19ஆம் நூற்றாண்டு முழுவதும் 1997லிருந்து 10 வருடங்கள் மிகவும் வெப்பமாக வருடங்களாக இருந்தன என்பதை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2010க்கு மேல் உலக வெப்பமயமாதல் குறித்த சில சந்தேகங்கள் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் கூற்றுகள் சமீப வருடங்களாக நிறுத்தப்பட்டன.

2014ல் வெப்பநிலை, ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் உள்ளிட்டு வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் வரை நீண்டிருந்தது. மேற்கு அலாஸ்கா தீவுகளிலிருந்து ரஷ்யாவின் கிழக்கு வரை தென் அமெரிக்காவின் உள்ளார்ந்த பகுதிகளிலும் கிழக்கு மற்றும் மேற்கு கடலோர ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியாவின் இன்னும் சில இடங்களிலும் உலகம் முழுவதும் பதிவானதாக நாசாவும் நோயாவும் தெரிவித்துள்ளன. 

குழப்பமான வானிலை நிலைமைகளால் வருடத்திற்கு வரும் பாதிப்படையும் புவிவெப்பமாதலுககான காரண கர்த்தாக்களால் மனிதர்களால் உருவாக்கப்படும் கிரீன்ஹவுஸ் வாயுக்களால் உருவாக்கப்படும் மாசு, மிகப்பெரும் இடர்களை பூமிக்கு ஏற்படுத்திவருவதாக நியூயார்க்கில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி ஆய்வுக் கழக இயக்குநர் காவின் ஸ்மித் தெரிவித்தார்.

பெரும் சுற்றுச்சூழல் கேட்டை விளைவிப்பதில் கிரீன்ஹவுஸ் வாயுக்களுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளதாகத் தெரிவிக்கும் இந்தப் புள்ளிவிவரம் மிகவும் தெளிவானது. இந்த ஆண்டு இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐக்கியநாடுகள் நடத்திய ஆய்வு ஏற்கெனவே வெப்பமும் மழையும் மிதமிஞ்சிய அளவில் இருந்ததைத் தெரிவித்ததால் உணவுக்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அண்டார்டிகா கண்டத்தில் உள்ள கிரீண்லேண்ட்டில் பிரமாண்ட ஐஸ்கட்டிகள் உருகிக்கொண்டிருப்பதால் கடல் மட்டம் உயர்ந்துவருகிறது. இதனால் கடலோர மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.

அடுத்த டிசம்பரில், 200 உலக நாடுகள் பாரீஸில் சந்தித்து புவிவெப்பமாதலைத் தடுப்பது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மாற்றிக்கொள்வது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். கிரீன்ஹவுஸ் வாயுக்களை அதிகம் பயன்படுத்தும் சீனா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஐ.நாவின் இத்தகைய முயற்சிக்கு உச்சபட்ச ஒத்துழைப்பை நல்கும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து