முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி., பட்ஜெட் கூட்டத் தொடர் பிப். 23ல் துவங்குகிறது

புதன்கிழமை, 21 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

புது டெல்லி - பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி மாதம் 23ம் தேதி துவங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பிப்ரவரி 26-ந் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 28-ந் தேதி பொதுபட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை இரு பகுதிகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பிப்ரவரி 23-ந் தேதி முதல் மார்ச் 20-ந் தேதி வரை ஒரு பகுதியாகவும், பின்னர் ஏப்ரல் 20-ந் தேதி முதல் மே 8-ந் தேதி வரை 2வது பகுதியாகவும் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொடரின் முதல் நாளில் பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். பின்னர் 26-ந் தேதியன்று ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தாக்கல் செய்கிறார். நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 27ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையையும் 28-ந் தேதி பொதுபட்ஜெட்டையும் தாக்கல் செய்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து