முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஜகவில் இணைவதாக தகவல்: கங்குலி மறுப்பு

வெள்ளிக்கிழமை, 23 ஜனவரி 2015      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. தற்போது டி.வி வர்ணணையாளராக இருக்கும் அவர் பாரதீய ஜனதாவில் இணைய போவதாக தகவல் வெளியானது.

இது குறித்து கங்குலியிடம் நிருபர்கள் கேட்டதற்கு, கருத்து தெரிவிக்க அவ ர் மறுத்து விட்டார். பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த மரியாதை வைத்து இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் இத்தகவலை பாரதீய ஜனதா தேசிய செயலாளர் சித்தாரித் நாத் சிங் மறுத்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், பாரதீய ஜனதாவில் கங்குலி இணைய போவதாக வந்த தகவலில் உண்மையில்லை. அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். எங்களது கட்சி தலைவர்கள் சிலர் நல்லுறவுடன் உள்ளனர் என்றார். மத்திய மந்திரி பபுல் சுப்ரியோ கூறுகையில், கங்குலி பாரதீய ஜனதாவில் இணைந்தால் மேற்கு வங்காளத்தில் பாரதீய ஜனதா மேலும் பலம் பெறும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து