முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம்: தி.மு.க.வை ஆதரிப்பதா? காங்., குழப்பம்

சனிக்கிழமை, 24 ஜனவரி 2015      அரசியல்
Image Unavailable

சென்னை - ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 13–ந் தேதி நடக்கிறது. அதையொட்டி அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் பா.ஜனதா கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டது.

இதற்கிடையே வேட்புமனு தாக்கல் வருகிற 27–ந் தேதியுடன் முடிகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் உத்தேசம் எதுவுமில்லை. இந்த நிலையில், மத சார்பற்ற கட்சிகள் தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும் என தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதுபற்றி கருத்து கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் தி.மு.க.விடம் இருந்து இது குறித்து கோரிக்கை வந்தால் பரிசீலிப்போம் என தெரிவித்தார். கட்சியிடம் தி.மு.க. நேரடியாக ஆதரவு கேட்கவில்லை.

எனவே, தி.மு.க.வை ஆதரிப்பதா அல்லது தேர்தலை புறக்கணிப்பதா? என முடிவெடுக்க முடியாமல் தமிழக காங்கிரஸ் கட்சி குழப்பத்தில் உள்ளது. இங்கு நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து டெல்லி மேலிடத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழக காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் முகில் வாஸ்னிக் வருகிற 27–ந் தேதி தமிழ்நாடு வருகிறார். சென்னை, திருச்சி, ஈரோடு ஆகிய 3 இடங்களில் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
அப்போது ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து