முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20-யில் 350 வீக்கெட்கள் வீழ்த்திய இந்தியர்: யுஸ்வேந்திர சாஹல் சாதனை

புதன்கிழமை, 8 மே 2024      விளையாட்டு
Delhi-Capitals 2024-03-23

Source: provided

டெல்லி  டி20 கிரிக்கெட் போட்டியில் 350 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். 

டெல்லி வெற்றி...

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஒவர்களில் 221 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான அணி 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது.

புதிய சாதனை... 

இந்த போட்டியில் ராஜஸ்தான் வீரர் யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவரில் 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் முதல் இந்திய வீரராக புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். நேற்றைய போட்டியில் அவர் வீழ்த்திய ஒரு விக்கெட் மூலம் அனைத்து வகையாக டி20 கிரிக்கெட்டையும் சேர்த்து சாஹல் 350 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பியூஸ் சாவ்லா 310, ரவிச்சந்திரன் அஸ்வின் 306 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து