முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே நாளில் மருத்துவ விடுப்பு எடுத்த 300 ஊழியர்கள்: ஏர் இந்தியாவின் 78 விமானங்கள் ரத்து: அவதிக்குள்ளான பயணிகள்

புதன்கிழமை, 8 மே 2024      இந்தியா
Air-India 1

Source: provided

புதுடெல்லி : ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். 

மத்திய அரசுக்கு சொந்தமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது. இந்த நடவடிக்கையின் போது ஏற்கனவே பணியில் இருந்த ஊழியர்களுக்கும் புதிய ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

நேர்காணலில் நன்றாக செயல்பட்டபோதும் குறைவான நிலையில் ஊதியம் உள்ள பணியில் அமர்த்தப்படுவதாகவும், போனஸ் உள்ளிட்டவற்றில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் ஊழியர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஏர் இந்தியா ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று ஒரேநாளில் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளனர். இதனால் ஏர் இந்தியா விமான சேவை பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. 78 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

உள்நாடு, வெளிநாட்டு விமான சேவை கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

விமான ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரேநாளில் 300-க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா விமான ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து