முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

தைப்பூச திருவிழாவையொட்டி மதுரை அழகர்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் கொடியேற்றப்பட்டது.

திருக்கோயில் சன்னதி முன்புள்ள தங்கக் கொடி மரத்தில் காலை 8.50 மணிக்கு மேளதாளம் முழங்க முதன் முறையாக மயில் அடையாளம் பொறித்த கொடியேற்றப்பட்டது. அதை தொடர்ந்து கொடி மரத்துக்கு பால், பன்னீர், புஷ்பம், தீர்த்தம் மற்றும் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்னர் உற்சவர், மூலவர், வள்ளி, தெய்வானை சமேதர் சுப்பிரமணிய சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. விழாவில் கோயில் தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி வரதராஜன், முருகபக்த சபை புரவலர் சுப்பையா செட்டியார், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. மலையில் பூத வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று மாலை காமதேனு வாகனத்திலும், நாளை மாலை ஆட்டுக்கிடா வாகனத்திலும், 30ம் தேதி யானை வாகனத்திலும், தினந்தோறும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து 31ம் தேதி யானை வாகனத்திலும், பிப்ரவரி 1ம் தேதி குதிரை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 2ம் தேதி காலையில் தங்கத் தேரில் சுவாமி புறப்பாடும், மாலையில் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி முருகப் பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 3ம் தேதி காலையில் தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. இதில் தீர்த்தவாரி, மகா அபிஷேகம், கலச அபிஷேகம் நடைபெறும். அன்று மாலை கொடியிறக்கம் செய்யப்பட்டு தீபாராதனையுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து