முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குர்தா உடை அணிய ஒபாமா விருப்பம்

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது மனைவி மிச்செலுடன் 3 நாள் பயணமாக டெல்லி வந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மரபுகளை மீறி ஒபாமாவை விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார். கட்டித்தழுவியும், கைகுலுக்கியும் அவரை அன்புடன் வரவேற்றார்.

மோடியின் அன்பு மழையில் நெகிழ்ந்து போனார் ஒபாமா. விமான நிலைய வரவேற்பின் போது மோடி குர்தா அணிந்து இருந்தார். பிரவுண் கலரில் குர்தாவும், சிவப்பும், காவியும் கொண்ட து ண்டுடன் இருந்தார். இது ஒபாமாவை கவர்ந்தது. ஜனாதிபதி மாளிகையில்  அவருக்கு பிரணாப் முகர்ஜி விருந்து அளித்தார். அப்போது ஒபாமா பேசுகையில், இந்தியாவின் நட்பு கிடைத்ததையும், என்னை கவுரவித்ததையும் மிகவும் பெருமையாக கருதுகிறேன். மோடியின் குர்தா உடை என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த உடையை அணிய நான் விரும்புகிறேன். அந்த உடை நல்ல மிடுக்கான பாணியில் இருக்கிறது. உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவி்ன் பிரமதர் அளித்த வரவேற்பு சிறப்பானதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடி பெரும்பாலும் ஒபாமாவுடனேயே இருந்தார். விமான நிலைய வரவேற்பு, ஜனாதிபதி மாளிகை வரவேற்பு, நேரடி பேச்சுவார்த்தை, ஜனாதிபதி மாளிகை விருந்து ஆகிய ஒவ்வொரு நிகழ்ச்சியின் போது மோடி வெவ்வேறு உடை அணிந்து இருந்தார். வரவேற்பின் போது குர்தாவும், நேரடி பேச்சுவார்த்தையின் போது கருப்பு கலர் கோட்டும், விருந்து நிகழ்ச்சியின் போது வெள்ளை நிற கோட்டும் அணிந்து இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து