முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி இடைத்தேர்தல்: தெலுங்கு தேச வேட்பாளருக்கு ஒய்எஸ்ஆர் காங். ஆதரவு

திங்கட்கிழமை, 26 ஜனவரி 2015      இந்தியா
Image Unavailable

திருப்பதியில் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தே ர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெங்கட்ரமணா போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கட்ரமணா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இதனால் புதிய எம்எல்ஏவை தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது.

அதை தொடர்ந்து தெலுங்குதேசம் கட்சி சார்பில் மறைந்த எம்எல்ஏ வெங்கட்ரமணாவின் மனைவி சுகுணாவை வேட்பாளராக  அறிவித்தது. மனு தாக்கலும் செய்யப்பட்டது. அதே போல் பல்வேறு தர ப்பினரும் மனு தாக்கல் செய்தனர். எனினும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் இதுவரை தமது வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நாங்கள் திருப்பதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சுகுணாவுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என்றும் அறிவித்துள்ளார். இதனால் திருப்பதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டியின் பெருந்தன்மையை பாராட்டி அவருக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் சுகுணா நன்றி தெரிவித்துள்ளார். இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி திருப்பதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடந்தது. அதில் தெலுங்குதேசம் கட்சி சார்பில் ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணாரெட்டி, நகரி முன்னாள் எம்எல்ஏ காலிமுத்துகிருஷ்ணமநாயுடு மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நகரி தொகுதி எம்எல்ஏ நடிகை ரோஜா, திருப்பதி தொகுதி முன்னாள் எம்எல்ஏ கருணாகர் ரெட்டி, சந்திரகிரி தொகுதி எம்எல்ஏ செவிரெட்டி, பாஸ்கர் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து