முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நிறைவு

செவ்வாய்க்கிழமை, 27 ஜனவரி 2015      தமிழகம்
Image Unavailable

கோவை - யானைகளுக்கான சிறப்பு நல்வாழ்வு முகாம் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து தங்கள் இருப்பிடங்களுக்கு யானைகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அதிமுக பொதுச் செயலாளரும், மக்களின் முதல்வருமான ஜெயலலிதா கோயில் மற்றும் வளர்ப்பு யானைகளுக்கான நல்வாழ்வு முகாம்களை நடத்த உத்தரவிட்டிருந்ததை தொடர்ந்து யானைகளுக்கான நல்வாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி யானைகளுக்கான 7வது நல்வாழ்வு முகாம் கடந்த 11ம் தேதி தொடங்கியது.
 
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்  தேக்கம்பட்டியில் அமைந்துள்ள  வனபத்ர காளியம்மன் கோவில் பவானி ஆற்றுப் படுகையில் கோவில் யானைகளுக்கான முகாம்  துவங்கியது.  இந்த முகாமில் 30 யானைகள் கலந்து கொண்டன.
 
48 நாட்கள் நடை பெற்ற இந்த முகாமில் யானைகளுக்கு சமச்சீர் உணவு, நடைப்பயிற்சி மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் கலந்து கொண்ட யானைகள் இயற்கையான சூழலில் மிகவும் உற்சாகமாக காணப்பட்டன. மேலும் இந்த முகாமில் யானை பாகன்களுக்குத் தேவையான உணவு,தங்குமிடம்,மருத்துவ வசதிகள் மற்றும் யானைகளை கையாள்வதற்கு சிறப்புப்பயிற்சியும் அளிக்கப்பட்டது.
 
இதே போல் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் நடந்த வளர்ப்பு யானைகளுக்கான சிறப்பு நல வாழ்வு புத்துணர்வு முகாமில் மொத்தம் 26 யானைகள் கலந்து கொண்டன. யானைகளுக்கான இந்த நல்வாழ்வு முகாம் நேற்று 48 நாட்களுக்கு பிறகு நிறைவடைந்தது. முகாம் நிறைவடைந்ததையொட்டி யானைகளை அமைச்சர் காமராஜ் வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை  அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
 
இந்த முகாமில் கலந்து கொண்ட யானைகளுக்கு மூலிகை குளியல் மற்றும் கரும்பு, அன்னாசி, சாத்துக்குடி போன்ற சத்தான உணவு வகைகள் அளிக்கப்பட்டன. முகாம் நிறைவு பெற்றதை அடுத்து யானைகள் புத்துணர்ச்சியோடு தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பின. இதே போல் யானை பாகன்களுக்கும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சிகள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக யானை பாகன்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து